Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்
மௌனம் காக்கவில்லை நிதானமாக செயல்படுகிறோம்.. கட்சி நலன் கூட்டணி நலன் மிக முக்கியமானது, அதனால் எல்லாரும் எதிர்பார்க்கும் வேகத்தை இதில் எங்களால் காட்ட முடியவில்லை. நாம் களத்தில் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறோம், போராடிக் கொண்டே இருக்கிறோம் பேசிக் கொண்டே இருக்கிறோம், அப்போது முரண்கள் வர தான் செய்யும்.
ஆனால் அதனால் நாங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று சொல்ல முடியாது. அது தொலைநோக்குப் பார்வை கொண்டது. ஆனால் அதே நேரம் கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, உரிமைகளை கேட்காமல் இருக்க முடியாது.
கூட்டணி தொடர்பான களத்தில் திமுகவுடன் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கூட்டணியில் இருந்தாலும் கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணத்தில் சென்னையிலேயே அரசு எதிர்த்து போராட்டம் நடத்தினோம்.
மது ஒழிப்பு என்பது பொதுவான கோரிக்கை, மதுவிலக்கு அதிமுக திமுக மதிமுக பாமக இடதுசாரிகள் என எல்லா கட்சிகளுக்கும் உடன்பாடு இருக்கிறது. அப்படி இருக்கும்போது மதுக்கடைகளை மூடுவது என்ன தயக்கம். அதனால் இதை தேர்தலோடு முடிச்சு போட வேண்டாம், இது தேசிய அளவிலான பிரச்சனை, பொது பிரச்சனை அதனால் அதிமுக வரலாம் என்று இயல்பாக கூறினேன்.
திமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் அதிமுக, திராவிட இயக்கத்தை எதிர்க்கும் சில கட்சிகள் ஆர்எஸ்எஸ் பிஜேபி ஆகியோர் திட்டமிட்டை இதுபோன்ற தகவல்களை பரப்பி சதி செய்கிறார்கள்.
நாங்கள் நாளை ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்பது அவர்களின் பயம் இல்லை, திமுக பலவீனப்படுத்தப்பட்டால் மட்டும்தான் தேர்தல் அரசியலில் அவர்கள் ஜெயிக்க முடியும், அதனால் திமுக கூட்டணியில் ஆக்டிவாக உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியை உடைக்க பார்க்கிறார்கள்.
எல்லா காலகட்டத்திலுமே பாஜக அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி குறித்து எங்களுடன் பேசி இருக்கிறார்கள் ஆசை காட்டி இருக்கிறார்கள் மிரட்டி கூட இருக்கிறார்கள்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என நான் பேசிய வீடியோ குறித்து பல்வேறு சர்ச்சைகள் உலா வருகிறது. ஆனால் அதில் எந்த உள்நோக்கமும் இல்லை, அது என்னுடைய அட்மின் தம்பிகள் போட்ட வீடியோ. நீண்ட நேரத்திற்கு பிறகு தான் எனக்கே தெரியும்.
ஆனால் அதில் எந்த இடத்தில் நடந்தது எப்போது பேசியது என்ற தகவல்கள் இல்லை, அதனால் அதனை டெலிட் செய்து விட்டார்கள். அதுவே செய்தியாக மாறிவிட்டது. அதன் பிறகு என்னிடம் போடலாமா வேண்டாமா என்று கேட்டார்கள், அப்போது ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு கடைசி மனிதர்க்கும் ஜனநாயகம் எளிய மக்களுக்கும் அதிகாரம், என்று எங்கு நடந்தது என்ற விவரங்களுடன் முழு லிங்கையும் போட சொன்னேன்.
ஆதவ் அர்ஜுனாவின் கருத்து கட்சி நலன் சார்ந்தது, அதே நேரம் வன்னியரசு ரவிக்குமார் சிந்தனை செல்வன் ஆகியோரின் கருத்து கூட்டணி நலன் சார்ந்தது. சுயநலம் கொண்டவர்கள் யாரும் என்னுடன் இல்லை, சிலர் அவர்களின் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக திமுக கூட்டணி சார்ந்து பேசுவதாக திட்டமிட்டே பரப்புகிறார்கள்.
நான் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரு கருத்தை சொல்ல முடியாது, எனக்கு கட்சியின் நானும் முக்கியம் கூட்டணி நானும் முக்கியம். குடும்பத்தில் யாரேனும் நபர் தவறு செய்து விட்டால் அவர்களுக்கு ஒரு நேரம் கொடுத்து ஸ்பேஸ் கொடுத்து தவறை எடுத்து சொல்லி புரிய வைக்க ஒரு நேரம் தேவை. அதுபோன்று அர்ஜுனாவுடன் நான் உட்கார்ந்து பேசினேன். நீங்கள் பேசியது ஒரு pre matured approach என்று சொன்னேன். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் இருக்கிறது, தற்போது அதைப் பற்றி பேசலாமா என்று கேட்டேன்.
அண்ணா நான் திட்டமிட்டு பேசவில்லை, பளரும் வந்து கேட்டதற்கு நான் ரியாக் செய்றேன். நான் ரியாக்ட் செய்வது தவறு தான், அதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்றார் ஆதவ அர்ஜுனா.
எனக்கு இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தற்போது நான் சொன்னதை அவர் புரிந்து கொண்டார். நாங்க பேசினா அதே கொள்கை ஆட்சியில் அதிகாரம் என்பதை தான் ஆது அர்ஜுனாவும் பேசியுள்ளார், ஆனால் அதற்கு இடம் பொருள் ஏவல் என்ற ஒன்று தேவை. எதை எப்போது பேச வேண்டும் எதை யாரிடம் கேட்க வேண்டும் என்பதும் இருக்க வேண்டும்.
தொண்டர்கள் ஆசை என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் இறுதி முடிவை தலைமை தான் எடுக்கும்.