Thamimum Ansari on Modi Cabinet : ”நிதிஷ், சந்திரபாபு மோடிக்கு ஒரு வேகத்தடை” தமிமுன் அன்சாரி தடாலடி
பாஜக கூட்டணியில் உள்ள இரண்டு சாணக்கியர்களும் பாஜகவிற்கு நிச்சயமாக வேகத்தடைகளை ஏற்படுத்துவார்கள் - மஜக மாநில தலைவர் தமிமுன் அன்சாரி..!
பிரதமர் பதவி ஏற்கும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த மஜக மாநில தலைவர் தமிமுன் அன்சாரி.
அசைக்க முடியாத சக்தி எனக்கூறிய மோடியை நாட்டு மக்கள் அசைத்து, எச்சரித்துள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
பாஜக அசைக்க முடியாத சக்தி எனக்கூறிய மோடியை நாட்டு மக்கள் அசைத்து, எச்சரித்துள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தேர்தல் முடிவு தொடர்பாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வாணாதிராஜபுரம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஹாஜா சலீம் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் தமிமுன் அன்சாரி கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு நூற்றுக்கு நூறு வெற்றி வாகை சூடும் வகையில் வாக்களித்த அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் கூட்டணிக்கு தலைமையேற்று புயல்வேக பரப்புரை முன்னெடுத்து இந்த சிறப்பான வெற்றியை சாத்திய படுத்திய தற்காக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல்வேறு விதமான எண்ண அலைகளை எதிரொலித்தது உள்ளது. இந்தியா கூட்டணி மாபெரும் எழுச்சியை பெற்று மக்களின் நம்பிக்கைக்குறிய எதிர்கட்சிகளின் சங்கமமாக உருவெடுத்துள்ளது. மிக முக்கியமான பாஜகவின் வாக்குகளை குறைத்தும், காங்கிரஸ்க்கு கூடுதல் வாக்குகள் அளித்து இந்திய மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரித்துள்ளனர்.
மூன்றாவது முறையாக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் , இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் 10 ஆண்டுகளில் சிதைந்து கிடப்பதாகவும், அனைத்து மக்களின் உணர்வுகளை மதித்து பிரதமர் மோடி ஆட்சி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
பாஜக கூட்டணியில் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ்குமார் ஆகிய இரண்டு சாணக்கியர்கள் இருப்பதாகவும், நாடாளுமன்றத் தொகுதி அதிகப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், கருத்து தெரிவித்தார். மேலும் இரண்டு சாணக்கியர்களும் பாஜகவில் நிச்சயமாக வேகத்தடைகளை ஏற்படுத்துவார்கள் எனவும் தெரிவித்தார்.