Thalavai Sundaram Removed From ADMK | தளவாய் நீக்கப்பட்டது ஏன்?தூக்கியடித்த EPS..தூண்டில் போடும் BJP

Continues below advertisement

அதிமுகவின் மூத்த நிர்வாகியாகவும் கன்னியாகுமரியில் அதிமுகவின் முகமாக கருதப்படும் தளவாய் சுந்தரத்தின் பொறுப்புகளை பறித்து ஈபிஎஸ் அதிரடி ஆக்‌ஷனில் களமிறங்கியுள்ளார்! ஈபிஎஸின் இந்த நடவடிக்கையால் கன்னியாகுமரி அரசியலில் என்ன மாதிரியான மாற்றம் ஏற்படும் என்பதை காணலாம்

தளவாய் சுந்தரம் மீதான நடவடிக்கைக்கு காரனம் அவர் ஆர் எஸ் எஸ் உடன் நெருக்கமாய் இருந்து வந்தது தான் என கூறப்படும் நிலையில்., கடந்த இரு தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்ததன் எதிரொலி தான் இந்த நடவடிக்கை என கருதப்படுகிரது. இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்த தளவாய் சுந்தரமும் எம் எல் ஏ என்ற முறையில் தான் ஆர் எஸ் எஸ் பேரணியில் கலந்து கொண்டதாகவும் மத்தபடி கட்சியை விட்டு நீக்கினாலும் ரெடி என கூறி ட்விஸ்ட் கொடுத்துள்ளார். இது கன்னியாகுமரி அதிமுகவினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியை பொறுத்த வரை இங்கு திராவிட கட்சிகளைவிட தேசிய கட்சிகளிக்கே செல்வாக்கு அதிகம். திமுக, அதிமுக கட்சிகள் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் வாக்குகளை கருத்தில் கொண்டே அங்கே தேர்தல் களம் காணும். கடந்த மக்களவை தேர்தலின் போதும் திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு அந்த தொகுதியை ஒதுக்கியது. 2021 தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது,. தற்போது பாஜகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி உள்ளதால் அங்கு அதிமுக கொஞ்சம் வீக்காக உள்ளது எனவே கூறலாம்.கன்னியாகுமரியில் அதிமுகவுக்கு பெரிதாக பலம் இல்லாததால் அங்கு சிட்டிங் எம் எல் ஏவாக உள்ள தளவாய் சுந்தரம் வெறும் அதிமுக வாக்குகளை மட்டும் நம்பி இம்முறை களமிறங்க மாட்டார். அதன் காரனமாகவே அவர் ஆர் எஸ் எஸ் பாஜகவுடன் உள்ள நெருக்கத்தை தொடர்ந்து வருவதாகவும் பேசப்படுகிறது.

கன்னியாகுமரி திமுகவுக்கும் வீக்கான தொகுதிதான்..அதிமுக வுக்கும் வீக்குதான் ஆக பாஜக தனது பலத்தை அங்கே காட்டுவது எளிது என்பதால் குட்டையை குழப்பும் நடவடிக்கைகளில் களமிறங்க்யும். வரும் சட்டமன்ற தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளையும் ஓரம்கட்டிவிட்டு கன்னியாகுமரியை கைப்பற்ற துடிக்கிறது பாஜக.

இந்நிலையில் தளவாய் சுந்தரம் நீக்கம் தொடர்பாக பேசிய ஹச் ராஜா தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன் என தெரிவித்து பரபரப்பை கூட்டினார். அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பாஜக வேண்டாம் என்ற மனநிலையில் இருந்தாலும் இரண்டாம் கட்ட தலைவர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை தக்கவைக்க பாஜக கூட்டணி வேண்டும் என கருதுகின்றனர். சமீபத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசனும் பாஜக கூட்டணிக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

எனினும் பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடியின் முடிவே இறுதியானது. இதுவரை எடப்பாடி கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகிறார் என்ற விமர்சனம் இருந்து வந்தது. ஆனால் தற்போது மூத்த நிர்வாகி, ஜெயலலிதா காலத்து அமைச்சர், எம் பி, சிட்டிங் எம் எல் ஏ வான தலவாய் சுந்தரத்தின் மா செ பொறுப்பை நீக்கி தன் மீதான விமர்சனங்களுக்கு எண்ட் கார்டு போட்டுள்ளார் ஈபிஎஸ்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram