
Thadi Balaji on Vijay | ”தவெக 1st PROBLEM புஸ்ஸி என்ன தூக்கனாலும் பரவால்ல”உடைத்து பேசிய தாடி பாலாஜி | Vijay | Aadhav Arjuna | Bussy Anand
விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சேகர் முதல் தவெக நிர்வாகிகள் வரை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது அதிர்ப்த்தி தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கட்சி நிர்வாகிகளுக்கு பாலமா இருக்கனும் ப்ராப்ளமா இருக்க கூடாது விஜயை புஸ்ஸி தான் கட்டுப்படுத்தி வழிநடத்துக்கிறார் புஸ்ஸி ஆனந்த் இருக்கும் வரைக்கும் தவெக வளராது என்று தாடி பாலாஜி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
விஜய் கட்சித் தொடங்கியது முதல் அவருக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறார் நடிகர் தாடி பாலாஜி. சில மாதங்கள் முன்பாக விஜயின் உருவத்தை தனது நெஞ்சில் பச்சையும் குத்திக் கொண்டார் தாடி பாலாஜி. இன்று தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை காணச் சென்ற தாடி பாலாஜியை பாதுகாவலர்கள் வாசலில் தடுத்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விடாமல் தடுத்தார்கள். இந்த நிகழ்வு பரவலான விவாதத்தை உருவாக்கியது. விஜயின் உருவத்தை பச்சை எல்லாம் குத்திக் கொண்டாரே அவரையாவது உள்ளே விட்டிருக்கலாம் என பலர் சமூக வலைதளத்தில் தெரிவித்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் நடிகர் விஜய் பாலாஜியை சந்தித்தார். அப்போது பாலாஜிக்கு காப்பு ஒன்றை பரிசாக வழங்கினார். ஆனால் விஜய் அதை வாங்க மறுத்துவிட்டதால் பாலாஜி அந்த காப்பை தனது கையில் மாட்டிக் கொண்டார். இதர்க்கெல்லாம் புஸ்ஸி ஆனந்த் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.
ஏற்கனவே விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்ட தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மீது அதிர்ப்த்தி தெரிவித்திருந்தனர். தவெகவில் பதவிக்கு லட்சக்கணக்கில் காசு வாங்குகிறார்கள். புஸ்ஸி ஆனந்துக்கு தெரிந்தும் கண்டுக்கொள்ளாமல் இருகிறார் என்றெல்லம் அவர் மீது பல விமர்சனங்கள் வந்த வன்னம் உள்ளது. முன்பு விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் புஸ்ஸி ஆனந்த் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். புஸ்ஸி ஆனந்த் நன்றாக நடித்து விஜயை நம்ப வைத்து ஏமாற்றி வருகிறார் என்னை விடவும் புஸ்ஸி ஆனந்தை தான் விஜய் நம்புகிறார் என தெரிவித்திருந்தார்.
இப்படி இருக்க தவெக கட்சியில் என்ன நடக்கிறது என்பது விஜய்கே தெரியாது. விஜய்யை யார் சந்திக்க வேண்டும், யாருக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்பதை எல்லாம் புஸ்ஸி ஆனந்த் தான் முடிவு செய்கிறார் என்று தாடி பாலாஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தலைவர் விஜய் புஸ்ஸி ஆனந்தை நம்புகிறார். கட்சிக்காக பலரும் தங்களின் சொந்த பணத்தை செலவு செய்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். ஆனால், புஸ்ஸி ஆனந்த் எதையுமே விஜயிடம் சொல்வது இல்லை. நான் பலமுறை தலைவரை பார்க்க முயற்சி செய்தும் புஸ்ஸி ஆனந்த் அதை தடுத்து வருகிறார். தான் மட்டுமே விஜய்க்கு முக்கியமானவராக இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். ஒரு தொண்டன் தனது மனதில் இருக்கும் குறைகளை தலைவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போதுதான் கட்சியின் அடிப்படை நிலைமை என்ன தொண்டர்களின் நிலை என்ன என்பது தலைவருக்கு தெரியும். தவெக முதலாமாண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் என இரண்டுக்கும் என்னை அழைத்தார்கள். ஆனால், அங்கே போனால் அங்கு என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. இந்த கோபம் எனக்கு மட்டும் இல்லை கட்சியில் பலருக்கும் இருக்கிறது.
விஜயை 10 ஆயிரம் பேருக்கு தெரியுதுன்னா, என்ன ஒரு 100 பேருக்கு தெரியும். பாலாஜி ஒரு நிகழ்ச்சிக்கு வந்தா பாலாஜி தான் ஃபோகஸ் ஆகுறாரு, நாம ஃபோகஸ் ஆக மாட்றோம்னு வேணும்னு என்ன அவாய்ட் பன்றாங்க.புஸ்ஸி ஆனந்துக்கு இருக்கும் வரைக்கும் தவெக வளராது. தாடி பாலாஜி நிகழ்ச்சிக்கு வந்தா புஸ்ஸி ஆனந்த் டம்மி ஆகிடுறதா நெனைக்குறார். தொண்டர்கள் செத்தா கூட விஜய்க்கு சொல்ல மாட்றாங்க. இதை கேள்வி கேட்டா பதவி தர மாட்டாரு. புஸ்ஸி ஆனந்த் இப்படி செயல்படுவது தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியை தடுக்கும். இவனுங்ககெல்லாம் யாரு, நான் வந்த்து விஜய் சாருக்காக மட்டும் தான் என் உழைப்பிற்க்கான பலன் கண்டிப்பா கிடைக்கும் என தாடி பாலாஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.