Tamilisai Vs Annamalai : தமிழிசைக்கு அழுத்தம்? மேடையில் நடந்தது என்ன? பரபரப்பு விளக்கம்

Continues below advertisement

ஆந்திர முதல்வர் பதவியேற்பு விழா மேடையில், தமிழிசை சவுந்தரராஜனை விரலை அசைத்து காட்டி அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டித்த விவகாரம் தமிழகஅரசியலில் புயலை கிளப்பியுள்ள நிலையில், அனைத்து தேவையற்ற யூகங்களையும் தவிற்கும் விதமாக மேடையில் நடந்தது என்ன என்று முதல் முறையாக தமிழிசை மவுனம் களைத்துள்ளார்.

தமிழகத்தில் பாஜகவை வளர்த்தெடுக்க பிள்ளையார் சுளி போட்டதில் மிக முக்கியமானவர் தமிழிசை சவுந்தரராஜன். மாநில பாஜக தலைவராக இருந்து அவருக்கு பின்னர் தெலங்கானா மாநிலம் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பதவியை கொடுத்து மிக முக்கிய இடத்தில் வைத்திருந்தது பாஜக. 

இந்நிலையில் அண்மையில் தன்னுடைய தேர்தல் அரசியலுக்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தென்சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட்டார் தமிழிசை சவுந்தரராஜன், அங்கிருந்து தான் அண்ணாமலைக்கும் தமிழிசைக்கும் புகைச்சல் தொடங்கி உள்ளதாக தெரிகிறது.

தமிழிசை உட்பட பாஜகவில் யாருமே தமிழ்நாட்டில் வெல்லாத நிலையில், வெளிபடையாகவே பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்தது தான் தோல்விக்கு காரணம், சேர்ந்து இருந்தால் பல தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கலாம் என்று அண்ணாமலைக்கு ஒப்பன் அட்டாக் கொடுத்தார் தமிழிசை.

மேலும் பாஜக ஐ.டி விங் நிர்வாகிகள் சிலர் சொந்த கட்சி தலைவர்களையே விமர்சிப்பதாகவும், அதை இனி பொறுத்துகொள்ள முடியாது என்றும் எச்சரித்தார்.

இதெல்லாம் ஒருபக்கம் நடக்க ஆந்திர முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தமிழிசையை, மேடையிலேயே கை விரலை அசைத்து அழைத்த அமித்ஷா, மிரட்டும் தோனியில் எச்சரிக்கை விடுக்கும் காட்சிகள் வைரலாக பரவியது..

இந்நிலையில் அதை தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியே கசிய, என்ன நடந்தது மேடையில் என்று தமிழிசை சவுந்தரராஜனும், வாய் திறக்காமல் கையெடுத்து கும்பிட்டுவிட்டு விமான நிலையத்திலிருந்து பறந்து விட்டார். 

இப்படி பட்ட சூழலில் தான் மேடையில் நடந்தது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் “2024 தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆந்திராவில் சந்தித்தேன், அப்போது தேர்தலுக்கு பிந்தைய நிலை, மற்றும் தமிழகத்தில் நிலவும் சவால்கள் குறித்து அரிய அவர் என்னை அழைத்தார். நான் விவரிக்க முயன்ற போது, நேரம் குறைவாக இருந்ததால் என்னை தடுத்து நிறுத்திய மத்திய அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து அரசியல் மற்றும் தொகுதி பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் படி அறிவுறுத்தினார். பல தேவையற்ற யூகங்கள் உலாவி வரும் நிலையில், அதை தெளிவுபடுத்த இதை பதிவிடுகிறேன்” என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் வேறு எந்த பிரச்சனையும் தமிழக பாஜகவில் இல்லை, அமித்ஷா தன்னை கண்டிக்கும் வகையில் எதுவும் சொல்லவில்லை என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தாலும், உண்மையில் இது தான் நடந்தது என்றால், விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போதே இதை தெளிவுபடுத்தி இருக்கலாமே, ஏன் 40 மணி நேரம் காத்திருந்தார் தமிழிசை என்று கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

பாஜகவிடமிருந்து வந்த அழுத்ததின் காரணமாகவே தமிழிசை இது போன்ற ஒரு விளக்கத்தை அளித்திருக்கலாம் என்ற பார்வையயும் முன்வைக்கின்றனர்.

மேலும் அமித்ஷாவின் இந்த செயல்பாட்டால் வழக்கமாக கலகலவென இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையான மன உழைச்சலில் இருந்ததாகவும். பல தரப்பில் இருந்து பலர் தொலைப்பேசியில் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது, தன்னை நாட் ரீச்சபிலாகவே வைத்துகொண்டுள்ளார் என்றும் தெரிகிறது.

எது எப்படியோ தமிழக பாஜகவில் புயல் வீச தொடங்கியுள்ள நிலையில், விரைவில் இன்னும் பல அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram