Palanivel thiagarajan : வெள்ளை அறிக்கை தயார் - PTR வெளியிட இருப்பவை இது தான்! White paper | MK Stalin

Continues below advertisement

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்த வெள்ளையறிக்கையை நாளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் சட்டசபைக்கு வெளியே வெளியிடப்படும் முதல் வெள்ளை அறிக்கை இது என்பதால் மிக பெரிய எதிர்பார்ப்பு இதன் மீது எழுந்துள்ளது.

120 பக்கங்களைக் கொண்ட வெள்ளை அறிக்கையில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை, அதாவது அதிமுக அரசு ஆண்ட 10 ஆண்டுகளில் 4.85 லட்சம் கோடி கடனில் தமிழ்நாடு ஏன் சென்றது என்பதற்கு விடை இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. பொதுவாக மாநிலத்தில் ஏற்படும் அதியாவசிய அவசிய செலவு தொடற்பான வெள்ளை அறிக்கை 1977ம் ஆண்டு முதல் தாக்கல் செய்யப்படுகிறது, ஆனால் ஒரு மாநிலத்தில் ஒட்டுமொத்த நிதிநிலை குறித்து கடைசியாக 2001ம் ஆண்டு ஜெயலலிதாவின் ஆட்சியின் போது வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது, அதன் பின் 20 ஆண்டுகளுக்கு பின் ஒட்டுமொத்த மாநிலத்தின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் என்னென்ன திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது, அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அந்த நிதி ஒதுகீட்டில் செலவு செய்யப்பட்ட பணம் எவ்வளவு ஆகிய அனைத்து விஷயங்களும் இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் மேலும் பட்ஜெட்டில் இடம்பெறாத அறிவிப்புகளான, குறிப்பாக கொரொனா சிறப்பு நிதி பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது, அதெல்லாம் அரசு எந்த அளவிற்கு முறையாக செயல்படுத்தியுள்ளது என்ற விவரங்களும் இந்த வெள்ளை அறிக்கையில் தாக்கல் செய்யபடும்.

இந்த வெள்ளை அறிக்கை சட்டசபைக்கு வெளியெ தாக்கல் செய்யப்பட்டாலும், இதன் மீதான விவாதம் நிச்சயம் சட்டசபையில் நடைப்பெறும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் வழக்கமாக அரசு அதிகாரிகள் வெள்ளை அறிக்கை தயாரிக்க, அதை அமைச்சர் வெளியிடுவார், ஆனால் நிதி மேளான்மையை நன்கு அறிந்த, அறிக்கையை தானே தயார் செய்யக்கூடிய அனுபவம் வாய்ந்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுவதும் கூடுதல் முக்கிய துவத்தை ஏற்ப்படுத்தியுள்ளது அதிமுக ஆட்சி நடைப்பெற்ற போது பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளை அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் திமுக முன்வைத்தது.. அந்த குற்றச்சாட்டு அனைத்திற்க்கும் அதிகாரபூர்வ வலுவான ஆதாரம் இதில் இடம்பெற்று இருக்கும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

நிதிநிலையை அதிமுக எப்படி கையாண்டு இருக்கிறது, இத்தனை லட்சம் கோடி கடனுக்கு அதிமுக தான் காரணமா என்பது நாளை இதன் மூலம் தெரியவரும். ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்திய நிலையில், இந்த வெள்ளை அறிக்கை அரசியல் வட்டாரத்தில் மிக பெரிய புயலை கிளப்பும் என்று தெரிகிறது. உலகம் முழுவதும் ஆளும் கட்சிகளை திணரடிக்கும் வெள்ளை அறிக்கை, இங்கே எதிர்க்கட்சிய்யை திணரடிக்குமா .. பொருதிருந்து பார்ப்போம்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram