Tamil Nadu Cabinet Reshuffle: மனோ தங்கராஜ் RE-ENTRY! அமைச்சரவையில் மாற்றம்! ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்

தமிழக அமைச்சரவையில் மீண்டும் entry கொடுக்கிறார் மனோ தங்கராஜ். இதற்கு பின்னணியில் தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் பக்கா ஸ்கெட்ச் இருப்பதாக சொல்கின்றனர்.

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழலில் தான் தற்போது இருக்கும் தமிழ்நாடு அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்கள் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே நேற்று இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவுப்பும் வெளியானது. அதாவது, அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் விடுவிக்கப்படுவதாகவும் அதேபோல், மனோ தங்கராஜ் புதிதாகா அமைச்சரவையில் இணைக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. 

பண மோசடி வழக்கு செந்தில் பாலாஜி மீது நடந்து வரும் சூழலில் அமைச்சர் பதவியில் தொடர வேண்டுமா இல்லை ஜாமீன் வேண்டுமா என்பதை அவரே முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறிய நிலையில் தன்னுடைய அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாம செய்தார். 

அதேபோல், தொடர்ந்து ஆபாசமாகவும் சர்ச்சைக்குறிய வகையிலும் பேசி வந்த பொன்முடி அண்மையில் பெண்கள் குறித்து கீழ்த்தரமாக பேசிய சம்பவத்திற்கு தமிழ் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டாது. ஆனாலும், அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்த சூழலில் மூத்த அமைச்சராக இருப்பவரை எப்படி நீக்குவது என்ற நீண்ட யோசனைக்கு பிறகு ஒருவழியாக பொனுமுடியை நீங்களாகவே ராஜினாமா செய்து விடுங்கள் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறப்பட்ட நிலையில் தன்னுடைய அமைச்சர் பொறுப்பை அவர் ராஜினாம செய்திருக்கிறார்.

அந்தவகையில் செந்தில் பாலாஜி நிர்வாகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டதுள்ளது. அதேபோல், பொன்முடி வகித்து வந்த வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இச்சூழலில் தான் யாரும் எதிர்பார்க்காத மாற்றத்தை அமைச்சரவையில் கொண்டு வந்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதாவது, கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட மனோ தங்கராஜுக்கு இந்த முறை அமைச்சர் பொறுப்பு வழங்கியுள்ளார். அவருக்கு மீண்டும் பால்வளத்துறை பொறுப்பு வழங்க்கப்பட உள்ளது. அமைச்சரவரையில் இருந்து நீக்கப்ப்பட்ட மனோ தங்கராஜுக்கு மீண்டும் அவர் கடந்த முறை வகித்த அதே பொறுப்பு வழங்கியுள்ளதன் பின்னணி வெளியாகியுள்ளது. 

அதாவது தென் மாவட்டங்களில் சிறுபான்மையினருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கினால் அது சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு சாதகமாக அமையும் என்றும் மோடிக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தீவிரமாக பேசி வரும் மனோ தங்கராஜுக்கு அமைச்சர் பதவி வழங்குவதன் மூலம் கன்னியாகுமரி பகுதியில் சிறுபான்மையினரின் வாக்கு விஜய்-க்கு செல்வதை தடுக்க முடியும் என்று நோக்கில் அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த முறை அமைச்சரவையில் பொறுப்பு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola