TN Cabinet Shuffle | 2 சீனியர்கள் OUT.. ஜுனியர்கள் IN..! ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.. அமைச்சரவை மாற்றத்தின் போது தான் உதயநிதியும் துனை முதல்வராவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 2 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்ற கூடுதல் தகவலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் நாளை வெளியாகும் என தொடர் பரபரப்பு நிலவி வந்தது. மேலும் அமைச்சரவை மாற்றத்தின் போது உதயநிதியின் துனை முதல்வர் பதவி குறித்த அறிவிப்பும் வெளியாக உள்ளது என கூறப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், மாற்றம் இருக்கும் ஆனால் ஏமாற்றம் இருக்காது என சூசகமாக கூறினார்.
இந்நிலையில் தற்போதைய 15 மாதங்களுக்கு பிறகு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பிணையில் வெளியே வந்துள்ளார். எனவே அவரை மீண்டும் அமைச்சரவைக்குள் கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி மின்சாரத்துறையே மீண்டும் அவருக்கு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.இது ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கம் தற்போது விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ள அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக்குவதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே கட்சியில் சீனியர்கள் இருக்கும்போது மகனுக்கு துணை முதல்வர் பதவி என்ற விமர்சனம் எதிர்க்கட்சியினர் மத்தியில் தலையோங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்தபடியாக உதயநிதி துனை முதல்வரானால் பெரும்பாலும் சீனியர்கள் நிறைந்த அமைச்சரவையை தனது கண்ட்ரோலில் எடுக்கும் போது சில சிக்கல்கள் ஏற்படலாம் என்பத்ற்காக தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 2 அமைச்சர்களை நீக்கிவிட்டு புதிதாக இளம் வயது அமைச்சரகள் இருவரை நியமிக்க முடிவு செய்துள்ளாராம் ஸ்டாலின்.
இதனால் உதயநிதிக்கு அதிகாரம் செய்ய சற்று இணக்கமான சூழ்நிலை ஏற்படும் என்பதே அவர் போடும் கணக்கு.
மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி, அமைச்சர்கள் நீக்கம் என பல அறிவிப்புகள் பெண்டிங்கில் உள்ளதால் வரும் அமைச்சரவை மாற்ற அறிவிப்பை எதிர்பார்த்து பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்,.