Sumanth C Raman on MK Stalin : ”எல்லாமே பழசுபுது கம்பெனி எங்கே?”பகீர் கிளப்பும் சுமந்த்.சி.ராமன்

Continues below advertisement

இது எல்லாம் எற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்கள் தான் புதிய நிறுவனங்கள் எங்கே என்று   தமிழக அரசிடம் அரசியல் விமர்சகரான சும்ந்த் சி ராமன் கேள்வி எழுப்பி விமர்சித்துள்ள

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். 

இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு சென்றுள்ளார். அங்கு உள்ள தமிழக அரசு பல புரிந்துணர்வு ஒப்பந்தகளை கையேழுத்திட்டுள்ளது. 

 அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஐடி  நிறுவனமான Geakminds சென்னையில் ஐடி சேவை மையத்தை அமைத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும், மேலும் பிரபல நிறுவனமான Paypal நிறுவனமும் aiக்கான மேம்பட்ட டெவலப்மேன்ட் செண்டரை அமைக்க உள்ளது இதன் மூலம் 1000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிறது. 

இதுமட்டுமில்லாமல் பிரபல தொலைதொடர்பு நிறுவனமான நோக்கியாவும் FIXED Network சோதனை மையத்தை அமைக்க 450 கோடியில் முதலீடு செய்யவுள்ளது.இந்த முதலீடு மூலம் தமிழகத்தில்  பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் அரசியல் பிரபல விமர்சகரான சுமந்த் சி ராமன் இந்த முதலீடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்.. இந்த நிறுவனங்கள் அனைத்து  பல ஆண்டுகளாக ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ளன. இவை ஒன்றும் புதிய நிறுவனங்கள் அல்ல என்றும் இப்போது போடப்பட்டுள்ள முதலீடுகள் அந்த நிறுவனங்களின்  கூடுதல் முதலீடுகளாக இருக்கலாம்  தவிர  இவை அனைத்து தமிழ்நாட்டிற்கு புதிதாக வரும் நிறுவனங்கள் கிடையாது . Ohmium, Nokia, Microchip, Geekminds, Yield Engineering, PayPal போன்றவை ஏற்கனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்ப்பட்டு வருகின்றன என்று விமர்சித்துள்ளார், மேலும் தமிழக அரசின் Guidance Tn என்ற பக்கத்தையும் டேக் செய்து விளக்கம் கேட்டுள்ளார் 

சுமந்த சி ராமின் இந்த பதிவை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram