செந்தில் பாலாஜி ENTRY! எடப்பாடியார் வாழ்க” விடாமல் முழக்கமிட்ட அதிமுகவினர்
திமுக அமைச்சர்கள் மற்றும் செந்தில் பாலாஜியை பார்த்ததும் அதிமுகவினர் எடப்பாடியார் வாழ்க என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நாமக்கலில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு கூட்டங்கள் நடத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் இபிஎஸ் பிரச்சாரத்திற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
பிரச்சாரத்திற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தார் இபிஎஸ். அப்போது அவரை வரவேற்க அ.தி.மு.க வினர் கோவை விமான நிலையத்தில் திரண்டு இருந்தனர். அதே நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கோவையில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்கான பணிகளை செய்வதற்காக அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கோவை வந்துள்ளனர். அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது, இபிஎஸ்-க்காக காத்திருந்த அதிமுகவினர் எடப்பாடியார் வாழ்க, அ.தி.மு.க வாழ்க என கோஷமிட்டனர். அதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.