Senji Masthan : மஸ்தானுக்கு டம்மி பதவி? ஓரங்கட்டுகிறதா திமுக?

அண்மையில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் டம்மி பதவியை கொடுத்து செஞ்சி மஸ்தானை ஓரம் கட்டுகிறதா திமுக என்ற கேள்வி எழுந்துள்ளது..

விழுப்புரம் மாவட்டத்தை யார் கண்ட்ரோலில் எடுப்பது என்பதில் நீண்ட காலமாகவே அமைச்சர் பொன்முடிக்கும், அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் இடையே கடுமையான போட்டி நடைப்பெற்று வந்தது. இதனால் இருவர் ஆதரவாளர்களிடையே அவ்வப்போது கோஷ்டி பூசல் ஏற்படுவது, பேனர்கள் வைப்பதில் இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டா போட்டி நிலவுவது ஆகியவை இருந்து வந்தன.

குறிப்பாக இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மஸ்தானிடம் இருந்து அமைச்சர் பொன்முடி மைக்கை பிடுங்கிய போது, அந்த கோஷ்டி பூசல்கள் வெளிப்படையாகவே வெளியே வந்தது. 

இந்த நிலையில் தான் செஞ்சி மஸ்தானுக்கு எதிராக கள்ளச்சாராயம் புகார், விழுப்புரத்தில் செஞ்சி மஸ்தான் குடும்பத்தினரின் செலுத்தும் ஆதிக்கம், தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மட்டும் செய்வது, டெண்டர் ஒதுக்குவதில் பாரபட்சம் ஆகிய புகார்களால் திமுக நிர்வாகிகளும் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கினர். இதனால் முதலில் மகன் மற்றும் மருமகனின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. 

இந்நிலையில் இந்த ரிப்போர்ட்கள் அனைத்துமே ஸ்டாலினின் காதுகளுக்கு போக, அது இல்லாமல் பொன்முடியும் செஞ்சி மஸ்தானுக்கு எதிராக காய்களை நகர்த்த விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரார் பதவியை இழந்தார் அவர்.

அவருக்கு பதிலாக திண்டிவனம் ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த டாக்டர் ப. சேகர் என்பவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொருப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ப. சேகர் பொன்முடியின் ஆதரவாளர் என்றெல்லாம் சொல்லபட்டது.

இப்படி இருக்கையில் மீண்டும் செஞ்சி மஸ்தானுக்கு கட்சி பதவியை வழங்க முடிவு செய்த திமுக, தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின், மாவட்ட அவைத்தலைவராக அவர் நியமிக்கபடுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த மாவட்ட அவை தலைவர் பதவி, ப. சேகர் வகித்து வந்ததே. இந்நிலையில் செஞ்சி மஸ்தான் வகித்து வந்த பதவியை ப. சேகருக்கும், சேகர் வகித்து வந்த பதவியை மஸ்தானுக்கும் வழங்கியுள்ளது திமுக.

இந்நிலையில் விழுப்புரம் அரசியலில் இருந்து செஞ்சி மஸ்தானை ஓரம் கட்டும் வகையில் டம்மி பதவி ஒன்றை பெயருக்கு திமுக வழங்கியுள்ளதாக கருத்துக்கள் எழுந்துள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola