
Sengottaiyan: EPS-ன் ஜெ. பிறந்த நாள் விழா செங்கோட்டையன் ABSENT! அதிமுகவில் மீண்டும் கலகம்?
எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் செங்கோட்டையன், எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையும் புறக்கணித்திருக்கிறார். இச்சூழலில் இபிஎஸ் மீதான அதிருப்தியை செங்கோட்டையன் வெளிப்படையாகவே காட்டி வருவது தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி அத்திகடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூரில் நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் கலந்து கொண்ட நிலையில் அதிமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.
அவர் கலந்து கொள்ளாதது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், ”அத்திக்கடவு அவினாசி திட்டதக்குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை. நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் வைக்கப்படாததால் அதில் பங்கேற்கவில்லை.”என்று கூறினார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காத நிகழ்ச்சிகள் மட்டுமே பங்கேற்று வருகிறார் செங்கோட்டையன். கடந்த சில நாட்களுக்கு முன்னர் செங்கோட்டையனை அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் சந்தித்து பேசியதும் விவாதத்திற்கு உள்ளானது.
இந்த நிலையில் தான் தமிழக முன்னாள் முதல்வரும் , அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாருமான மறைந்த ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று தமிழ் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜி, கேபி முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்ற நிலையில் செங்கோட்டையன் மட்டும் பங்கேற்கவில்லை. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் பங்கேற்காதது அரசியல் களத்தை பரபரப்பாக்க்கியுள்ள நிலையில் இபிஎஸ் மீதான கடும் அதிருப்தியை செங்கோட்டையன் வெளிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.