Sengottaiyan | செங்கோட்டையனுக்கு Y பிரிவு?ஆட்டத்தை தொடங்கிய அமித்ஷா EPS-க்கு டெல்லி கொடுத்த பேரிடி

 

டெல்லி சென்ற எடப்பாடியிடம் பாஜக ராஜ்ஜியசபா சீட்  கேட்ட நிலையில் EPS சீட்டெல்லாம் தர முடியாது என்று கூறினால், செங்கோட்டையனை வைத்து செக் வைக்கும் முடிவில் அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடியின் இந்த டெல்லி பயணம், அதிமுகவினர் பலரை அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.மத்தியில் பவரில் இருக்கும் பாஜக-வை லெஃப்ட் ஹேண்டில் எடப்பாடி டீல் செய்கிறார். அவர் சமரசம் இல்லாமல் பாஜகவை எதிர்க்கிறார். எதற்கும் அஞ்சாவதவர் என்றெல்லாம் அவரை சுற்றி கட்டமைக்கப்பட்ட ஃபர்னிச்சர்களையெல்லாம் சல்லி, சல்லியாக அவரது டெல்லி பயணம் உடைத்துப் போட்டது.

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், அதிமுக மூத்த தலைவரும் எடப்பாடிப் பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பவருமான செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு சென்றார். இந்த பயணத்தை எடப்பாடி உள்பட எந்த நிர்வாகிகளும் எதிர்பார்க்கவில்லை. செங்கோட்டையன் டெல்லி செல்லவில்லை. அவர் டெல்லி சென்றதாக கூறுவது எல்லாம் பொய் என சிலர் கம்புச் சுத்தினாலும், அவர் அங்கு சென்றதும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததும் உண்மை என தெரியவர, அதற்கு எடப்பாடி எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று கடுகடுப்பான முகத்தோடு கூறிவிட்டு சென்றார். செங்கோட்டையன் சமாதானம் ஆகிவிட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கெலாம் அவரது டெல்லி பயணம் பெரும் ஷாக் எடப்பாடி பழனிசாமிக்கும்தான்.

அமித் ஷாவை சந்தித்து பேசி வந்த பிறகும் எடப்பாடி பழனிசாமி அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால், அவருக்கு செங்கோட்டையனை வைத்து கட்டம், கட்டும் முடிவை எடுத்தது பாஜக. ஜெயலலிதாவோடு ரத்தமும் சதையுமாக இருந்த சசிகலாவையே அந்த கட்சியில் இருந்து பிரித்து தூக்கியெறிய காரணமாக இருந்த பாஜகவிற்கு, சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி எம்மாத்திரம் ?

கூட்டணியை அறிவிக்கும் முன்னரே, எடப்பாடி பழனிசாமியை ஆழம் பார்க்க நினைத்த பாஜக, வரும் மாநிலங்களவை தேர்தலில் அதிமுகவிடம் இருந்து ஒரு ராஜ்ஜியசபா சீட்டை தரும்படி கேட்டுள்ளது. அதை எடப்பாடி பழனிசாமி கொடுத்துவிட்டால், கூட்டணி தேதியை பின்னர் அறிவிக்கலாம், இல்லையென்றென்றால் செங்கோட்டையனை வைத்து பிரிவு தேதியை அன்றே அறிவிக்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறது பாஜக.

ஒருவேளை எடப்பாடி பழனிசாமி தன்னை ஜெயலலிதா போன்ற ஆளுமை நிறைந்த தலைவராக கருதிக்கொண்டு, பாஜகவை கிள்ளுக் கீரையாக நினைத்து ராஜ்ஜியசபா சீட்டெல்லாம் தர முடியாது என்று கூறினால், செங்கோட்டையன் பிரிவு மூலம் பாஜக, பாமக எம்.எல்.ஏக்களை வைத்து ராஜ்ஜியசபா சீட்டை பெற்றுவிடலாம் என்ற முடிவில் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தேசியத் தலைவர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola