Sathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?
திமுகவிற்கு ஆதரவாக இருக்கும் நடிகர் சத்யராஜ் தவெகவில் பதவி கேட்டிருப்பது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் விஜய் தனது முதல் மாநாட்டில் பெரியாரின் கொள்கைகளை ஏற்பதாக அறிவித்தார். அதே நேரம் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகளை தான் ஏற்கவில்லை என்றும் கூறினார். இச்சூழலில் தான் திமுகவிற்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் நடிகர் சத்யராஜ் விஜயின் அரசியல் எண்ட்ரி குறித்து பாசிட்டிவ்வான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், ”விஜயை நான் சின்ன வயதில் இருந்து பார்த்து வருகிறேன். இவ்வளவு தூரம் வந்து மேடையில் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. ரொம்ப தன்னம்பிக்கையுடன் பேசினார். எங்களுடைய கொள்கை தலைவர் பெரியார் என்று சொன்னதில் எங்களுக்கு எல்லாம் ரொம்ப மகிழ்ச்சி.
தவெக வில் இருந்து அழைப்பு வந்தால் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கேட்பேன். நம்ம விஜய்தான அதெல்லாம் கேட்டால் குடுப்பார். பெரியாரின் கொள்கைகளை பரப்பும் பதவி எனக்கு கொடுங்கள் என்று கேட்பேன். செந்தூரப்பாண்டியன் படத்திற்கு முன்பு இருந்தே விஜயை எனக்கு நன்றாக தெரியும், அவரது வீட்டில் தான் பல படங்களின் சூட்டிங் நடந்து இருக்கிறது.அப்போது நிறைய முறை விஜயை பார்த்து இருக்கிறேன். பேசியும் இருக்கிறேன்.” என்று சத்யராஜ் கூறியிருக்கிறார். சத்யராஜ் இவ்வாறு கூறி இருப்பது திமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது