Salem Rain Police : கண்டுகொள்ளாத மாநகராட்சி? சாக்கடை நீரில் இறங்கிய POLICE! உடனே ஓடிவந்த காவல்துறை

Continues below advertisement

சேலத்தில் கனமழையால் சாலையில் மழைநீர் தேங்கிய நிலையில், நீண்டநேரம் ஆகியும் மாநகராட்சி அதிகாரிகள் வராததால், சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை எடுக்க காவல்துறையினரை களத்தில் இறங்கிய சம்பவம் பலராலும் பாராட்டப்படுகிறது.


சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிச்சிபாளையம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. குறிப்பாக சேலம் கிச்சிப்பாளையம் பிரதான சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். மழைநீரோடு சேர்த்து சாக்கடை நீரும் சேர்ந்ததால் மக்கள் அந்த வழியே செல்வதற்கு சிரமப்பட்டனர். நீண்ட நேரம் ஆகியும் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வராததால் மக்கள் ஆத்திரமடைந்தனர். பின்னர் அங்கு வந்த மாநகராட்சி மேற்பார்வையாளரிடம் இதுபற்றி கேட்ட போது பணியாளர்கள் வருவார்கள் என அலட்சியமாக பதில் கொடுத்ததாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இந்தநிலையில் காவல்துறையினரே களத்தில் இறங்கி சாக்கடை அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். மக்களுக்கு அதிக சிரமமாக இருந்தால் காவல்துறையினரே எந்த தயக்கமும் இல்லாமல் சாக்கடை நீரில் இறங்கி பணி செய்தது அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டது. காவல்துறையினரை பார்த்ததும் அந்தப் பகுதி மக்களும் உதவிக்கு வந்தனர். போக்குவரத்தையும் சரிசெய்து கொண்டே மாநகாட்சி சார்பில் செய்ய வேண்டிய பணியையும் காவல்துறையினர் செய்தனர். 

இருப்பினும் மழையால் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் மாநகராட்சி தாமதமாக செயல்பட்டது பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுவையில் எப்பொழுது மழை பெய்தாலும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram