DMK VS PMK | ’’உனக்கு யாரு அதிகாரம் கொடுத்தா?’’கடுப்பாகி கத்திய பாமக MLA! திமுக vs பாமக

Continues below advertisement

சேலத்தில் வீட்டின் அருகே நடைபெறும் வார்டு கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்று பாமக எம்எல்ஏ அருள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அவருக்கு எதிராக திமுகவை சேர்ந்த மண்டலக் குழு தலைவர் உமாராணியும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாநகராட்சி 15 வது வார்டு கூட்டம் இன்று நடைபெற்றது. பாமக mla அருள் இல்லத்திற்கு அருகாமையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்ற அதிருப்தியில் மாநகராட்சி ஊழியர்களை தன்னை ஏன் அழைக்கவில்லை ’’மக்கள் பிரச்சனையை பேச நான் வரக்கூடாதா’’ என்று கண்டித்தார். இதனிடையே கூட்டத்திற்கு தலைமை தாங்கிய அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் திமுகவை சேர்ந்த உமாராணி, எம்எல்ஏவின் கேள்விகளுக்கு மறுப்பு தெரிவித்து பேசினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போக அருள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். மக்கள் பிரச்சனையை தீர்க்க அனைவரையும் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்பது முதல்வரின் விருப்பம் ஆனால் முதலமைச்சரை அவமதிக்கும் நோக்கத்தோடு திமுகவினர் செயல்படுவதாக அருள் குற்றம் சாட்டினார். இதையடுத்து உடனடியாக உமாராணியும் தரையில் அமர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அருள் தவறான தகவலை தெரிவிக்கிறார் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.சேலத்தில் பாமக எம் எல் ஏ வுக்கும் திமுகவினருக்கும் இடையே பிரச்ச்னை ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram