RN Ravi college students | ”BLACK DRESS போடாதீங்க” அனுமதி மறுத்த POLICE! கடுப்பான மாணவிகள்

Continues below advertisement

ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கருப்பு உடையுடன் வந்த கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் உள்ளே விட அனுமதிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் 'Building Bharat - Journey towards 2024' எனும் தலைப்பில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்பித்தார். சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக ஆளுநர் சால்வை அணிவித்து பாராட்டினார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழக ஆளுநர், கிராமப்புற மற்றும் பின் தங்கிய பகுதிகளை சேர்ந்தவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், அப்போதுதான் ஏழை எளிய மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து அதற்கான உரிய கொள்கைகளை வகுக்க முடியும் எனவும் தெரிவித்தார். இந்த தேசத்திற்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது மிகவும் அவசியமாகும். எனவே செய்யும் பணியை முழு மனதோடு ஆர்வத்துடன் செய்ய வேண்டும். தொடர்ந்து படித்து அறிவை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம் என்று அறிவுரை வழங்கினார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு கருப்பு உடையில் வந்த சில மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடையில் வந்துள்ளார்களோ என்ற கோணத்தில் அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. ஆனால் கல்லூரிக்கு எப்போதும் போல் கருப்பு உடையில் வந்ததாக சொன்ன மாணவர்கள் அனுமதி மறுக்கப்பட்டதால் முகம் சுழித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆடைடை மாற்றி வந்த பிறகு மாணவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி அளித்தனர்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram