மோடியின் மனசாட்சி! ஸ்டாலினுக்கு ஸ்கெட்ச்! யார் இந்த கைலாசநாதன்?

Continues below advertisement

தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர் என் ரவி தொடரும் நிலையில், டெல்லியில் இருந்து ஆட்டத்தை தொடங்கி விட்டார் மோடி.. இன்னும் சில காலம் தான், திமுகவுக்கு குடைச்சல் கொடுக்க ஒருவர் வரப்போகிறார் என்று அடித்து சொல்கிறார்கள் பாஜகவினர்..

அவர்தான் மோடியின் நிழல் கே கைலாசநாதன்.. 

கடந்த ஜூலை 27ஆம் தேதி புதிய ஆளுநர்கள் பட்டியலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. ஆனால் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, ஆர் என் ரவியே தற்போது ஆளுநராக தொடர்கிறார்.

ஆனால் புதுச்சேரிக்கு புதிய துணைநிலை ஆளுநராக கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யார் என்றால் குஜராத்தை தன்னுடைய கண்ட்ரோலில் வைத்திருக்க மோடியின் வலது கரமாக செயல் பட்டவர்.

கேரளாவை சேர்த்த கைலாசநாதன், சென்னை பல்கலை கழகத்தில் படித்தவர். அதனால் இவருக்கு தமிழ் நன்றாக தெரியும். 1979இல் குஜராத் காடர் ஐஏஎஸ் அதிகாரியாக பதவி ஏற்ற இவர், குஜராத்தில் நிலவிய தண்ணீர் பஞ்சத்தை போக்க 43 கிலோமீட்டர் பைப் லைனை அமைத்தார். இதனால் பொதுமக்களின் பாராட்டுகளை பெற்ற கைலாசநாதர் மீது மோடியின் பார்வை விழுந்தது.

2006ல் குஜராத் முதல்வராக இருந்த மோடி, முதல்வர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக கைலாசநாதனை பணியவர்த்தினார். அங்கிருந்து மோடி கைலாசநாதன் ஐஏஎஸ் இடையேயான நெருக்கம் அதிகரித்தது. 

2014 இல் மோடி பிரதமராக பதவி ஏற்க டெல்லி செல்வதற்கு முன்பாக, அரசன் முதன்மை தலைமைச் செயலாளர் என்ற புதிய பொறுப்பை உருவாக்கி அதில் கைலாசநாதன் ஐஏஎஸ்ஐ அமர வைத்துவிட்டு சென்றார். டெல்லியில் பிரதமராக மோடி இருந்தாலும், குஜராத்தில் மோடியின் மனசாட்சியாக செயல்பட்டார் கைலாசநாதன் ஐஏஎஸ். 

மோடிக்கு பின் குஜராத் முதலமைச்சர் ஆக ஆனந்தி பின் பட்டேல், விஜய் ரூபாணி, பூபேந்திர பட்டியல் என பலர் மாறிக்கொண்டே இருந்தாலும், இவர் மாறவில்லை. குஜராத் அரசியலில் முதலமைச்சரை காட்டிலும் மிக முக்கியமானவராக கருதப்பட்டார் கைலாசநாதன் ஐஏஎஸ். 

பலமுறை தொடர்ந்து இவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்து நிலையில், அண்மையில் தன்னுடைய 71 வது வயதில் விருப்ப ஓய்வு பெற்றார்.. அப்போதே மோடியின் கண்ணும் காதுமாக இருந்த கைலாசநாதன் ஐஏஎஸ் க்கு நிச்சயம் மிக முக்கியமான பொறுப்பு வழங்கப்படும் என்று பலர் எதிர்பார்த்தனர். 


இந்நிலையில்தான் குஜராத்தில் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் இவர். தமிழ்நாட்டின் ஆளுநராக கைலாசநாதன் ஐஏஎஸ் ஐ நியமிக்க நினைத்தார் மோடி, ஆனால் ஆளுநர் ஆரன் ரவி டெல்லி சென்று, மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்து பேசிய பின் அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது. 

அதன் காரணமாகவே தற்போது புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் கே கைலாசநாதன். புதுச்சேரியில் ஆளுநராக நியமிக்கப்பட்டாலும், தமிழ்நாட்டை ரகசியமாக கண்காணிப்பது தான் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான டாஸ்க் என்று பாஜகவினர் சொல்லி வருகின்றனர். இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்படுவது தொடங்கி, கூர்மையான அரசியல் பார்வையும் கொண்ட கைலாசநாதன் அடுத்த சில காலங்களில் தமிழ்நாட்டில் ஆளுநராக அறிவிக்கப்படுவார் என்கின்றனர் பாஜகவினர். 

இந்நிலையில் 2026 தேர்தலுக்கு திமுக தயாராகி வரும் நிலையில், அதற்கு முன்னதாகவே இவர் தமிழ்நாட்டின் ஆளுநராக மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

இப்படிப்பட்ட சூழலில் எப்படி குஜராத்தை கைலாசநாதன் மூலமாக தன்னுடைய கண்ட்ரோலில் வைத்திருந்தாரோ மோடி, அதேபோன்று தமிழ்நாட்டிலும் கைலாசநாதர் மூலமாக திமுகவுக்கு குடைச்சல் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram