RB Udhayakumar : EPS-ஐ நெருக்கும் EX அமைச்சர்கள்! குறுக்கே வரும் RB உதயகுமார்! OPS-க்கு ஆப்பு

Continues below advertisement

அதிமுகவை மீட்டெடுக்க கட்சியை ஒருங்கிணைப்பதே ஒரே தீர்வு என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முடிவெடுத்து ஆறு பேர் கொண்ட குழு எடப்பாடி பழனிசாமியை அடிக்கடி சந்தித்து வருவதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதற்கு முட்டுகட்டையாக ஆர்.பி.உதயகுமார் தொடர்ந்து கொடைச்சல் கொடுத்து வருவதாக கூறி ஓபிஎஸ் அணி ஆர்.பி மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் எடப்பாடியோ நான் இருக்குற வரைக்கும் ஒருங்கிணைப்பே இல்லை திட்டவட்டமாக கூறிவருவதாகவும், பிற மாவட்டங்களுக்கு செல்லும் போது நிர்வாகிகளிடம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் வேறி வழியே இல்லாமல் எடப்பாடிக்கு எதிராகத்தான் செயல்பட்டு கட்சியை காப்பாற்ற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட நிலையில் ஆறுபேர் கொண்ட குழுவை தலைமை தாங்குபவர் சசிகலாவுடன் ரகசிய சந்திப்பை நடத்தியதோடு, ஓபிஎஸ் உடன் அடிக்கடி அலைபேசியில் பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இது எடப்பாடியின் காதிற்கு செல்ல முன்னாள் அமைச்சர்களை அழைத்து எடப்பாடி மழையை பொழைந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அதிமுகவை ஒருங்கிணைத்தால் மட்டுமே அதிமுகவை காப்பாற்ற முடியும் என முன்னாள் அமைச்சர்கள் விடாப்பிடியாக இருப்பாதால் அதிமுக தலைமையை கடுப்பாக்கியுள்ளது என சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் ஆறுபேர் கொண்ட குழுவின் முயற்சிகளுக்கெல்லாம் ஆர்.பி.உதயகுமார் முட்டுக்கட்டை போட்டு எடப்பாடி உத்தரவிட்டால் ஓபிஎஸை எங்குமே நடமாட முடியாத அளவுக்கு முடக்குவேன் எனஆர்.பி.உதயகுமார் சபதம் எடுத்துள்ளதாக சொல்லபடுகிறது. இது ஓபிஎஸ் அணியையும், ஆறு பேர் கொண்ட அணியையும் கோபப்படுத்தியுள்ளது.

சசிகலா, தினகரன் இல்லை என்றெல்லாலும் பராவாயில்லை ஓபிஎஸையாவது கட்சியில் சேர்த்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் கனவில் மண்ணை போடும்விதமாக ஆர்.பி.உதயகுமாரும் பேசி வருவதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளதாக தெரிகிறது. இதனால், ஆர்.பி. உதயகுமாரை கவணிக்க ஓபிஎஸ் குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்தநிலையில் டிடிவி தினகரன் குறித்து அவதூறாக பேசியதாக கூறி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் சில அதிமுக நிர்வாகிகள் மீது அமமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக ஆர் பி உதயகுமார் தரப்பு அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram