தாலி எப்போ? ராமதாஸிடம் கேட்ட சுசீலா! வெளியான சர்ச்சை வீடியோ! | PMK | Ramadoss second wife | Ramadoss Susila Video
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது இரண்டாவது மனைவி சுசீலாவுடன் சமீபத்தில் 50 வது திருமண நாள் விழா கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் சுசிலா ராமதாஸிடம் தாலி எப்போ கட்டுவீங்க என்று பொருள்படும் வகையில் கேட்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் தாலி கட்டாமலே எப்படி திருமண நாள் கொண்டாட முடியும் என சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பதிவிட்டு சிலர் கேள்வி எழுப்பி வருவது பாமக நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய முதல் மனைவியான சரஸ்வதியுடன் திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் கடந்த மாதம் வெளிவந்தது. இந்நிலையில் தான் ராமதாஸ் அவர்களுக்கு சுசிலா என்ற இரண்டாவது மனைவி இருப்பதாகவும், அவரை 1975-ல் திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்கள் இருவரும் தங்களுடைய 50 வது திருமண நாளை அண்மையில் கொண்டாடியதாக தகவல்கள் கசிந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்களும் சில தினங்களுக்கு முன் வெளியானது. குறிப்பாக ஆகஸ்ட் 24ம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் உள்ள திமுக எம் பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான தனியார் நட்சத்திர ஹோட்டலில் இவர்களின் திருமண நாள் விழா கொண்டாடப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதில் சுசிலாவின் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்ற நிலையில், ராமதாஸ் அவர்களின் குடும்பத்தை சார்ந்த எந்த நபரும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் ராமதாஸ் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இதுவரை வெளி வராத இந்த தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இத்தகைய சூழலில் தான், ராமதாஸ் அவர்களிடம் தாலி எப்போ என்று சுசீலா கேட்கும் வீடியோ தற்போது வெளியாகி மேலும் சர்ச்சையை கூட்டி உள்ளது. இந்த வீடியோ கடந்தாண்டு சுசீலா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய போது எடுக்கப்பட்டுள்ளது. அதில் பிறந்தநாள் பரிசாக ராமதாஸ் அவர்கள் சுசிலாவிற்கு Bracelet ஒன்றை கையில் அணிவிக்கிறார். அப்போது சுசீலா அவர்கள் தாலி எப்போ என்று கேட்டுள்ளது காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இதன் அடிப்படையில் தாலி கட்டாமலே எப்படி இரண்டாவது மனைவி என்று குறிப்பிட்டு திருமண நாள் கொண்டாட முடியும் என்று காரசாரமான விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் எதிரொலித்து வருகின்றன. இந்நிலையில் ஏற்கனவே 50 வது திருமண நாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படம் வெளியானதால் அதிருப்தியில் இருந்த பாமக வினர் மத்தியில், மீண்டும் இதுபோன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.