”விஜய்-இபிஎஸ் சேரக் கூடாது” காய் நகர்த்தும் ரஜினிகாந்த்! காரணம் என்ன?

எக்காரணத்தைக் கொண்டும் விஜய் அதிமுக பாஜக கூட்டணிக்கு வந்து விடக் கூடாது என ரஜினி தீவிரமாக காய் நகர்த்தி வருவதாக சொல்கின்றனர். ரஜினியின் இந்த ப்ளானிற்கு பின்னணியில் இருக்கும் காரணமும் கசிந்துள்ளது.


தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக களம் இறங்கியுள்ளது. ஆளும் திமுக தற்போது இருக்கும் இதே கூட்டணியுடனே தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. மறுபுறம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. 

அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் விஜயின் தவெக தங்கள் கூட்டணிக்கு வந்தால் அது கூடுதல் பலமாக அமையும் என்றும் திமுகவை வீழ்த்துவது மிக எளிமையாக இருக்கும் என்றும் அதிமுக தரப்பு நினைப்பதாக தகவல் வெளியானது. 

ஆனால் அதிமுக - பாஜக கூட்டணியில் எக்காரணத்தைக் கொண்டும் விஜயை இணைய விடக்கூடாது என ரஜினி தீவிரமாக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. ரஜினியின் இந்த ப்ளானிற்கு பின்னணியில் இருக்கும் காரணமும் கசிந்துள்ளது.

அதாவது சினிமாவில் ரஜினிக்கு இணையாக இருந்த விஜய் அரசியல் களத்திலும் குதித்து விட்டார். ஆனால் கட்சி ஆரம்பிப்பதாக சொல்லிய ரஜினி அதில் இருந்து பின்வாங்கி விட்டார். என்ன தான் கட்சி ஆரம்பிக்காமல் பின்வாங்கினாலும் அவரது மனதில் இன்னும் அரசியல் ஆசை இருப்பதாக சொல்கின்றனர். 


அரசியல் கட்சி இனி ஆரம்பிக்க முடியாது என்றாலும் அரசியல் களத்தில் தான் எப்போதும் பேசுபொருளாக இருக்க வேண்டும் என்று ரஜினி நினைப்பதாகவும் அதன் எபெக்ட் தான் தொடர்ந்து பாஜகவை புகழ்வது, இந்துத்வா அரசியல் பேசுவது, மோடியை புகழ்வது தொடர்ந்து பாஜக மற்றும் ஆன்மிகம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்குகொள்வது என ரஜினி செயல்படுவதற்கான முக்கிய காரணம்.

இதில் ஒரு படி மேலே சென்று அரசியல் சாணக்கியனாக தான் பார்க்கப்பட வேண்டும் என்றும் ரஜினி நினைப்பதாக சொல்கின்றர் விவரம் அறிந்தவர்கள். அதிமுக - பாஜக கூட்டணி அமைவதற்கு தூதுவனாக ரஜினி இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் இந்த கூட்டணியில் தவெகவை இணைக்க வேண்டும் என்று அதிமுக ப்ளான் போட்டாலும் அதை தடுக்கும் முனைப்பில் ரஜினி செயல்படுவதாக சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.


சினிமாவில் தான் விஜய் எனக்கு போட்டியாக இருந்தார் இப்போது அதிமுக - பாஜக கூட்டணிக்கு விஜய் வந்து விட்டால் என்னுடைய மெளசு குறைந்து விடும். அதிமுக தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் எல்லாம் சினிமாவில் இருந்து வந்தவர்கள் அதேபோல் விஜயும் சினிமாவில் இருந்து வந்து தலைவராக மாறியிருப்பவர் என்பதால் அதிமுகவினரிடம் விஜய்க்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதையெல்லாம் யோசித்து ரஜினி அப்செட் ஆகியுள்ளதாகவும் சொல்கின்றனர்.


அதேபோல்,கோவை - மதுரையில் விஜய்க்கு கூடிய கூட்டத்தை எல்லாம் பார்த்து ரஜினி அப்செட் ஆனதாகவும் அதிமுக  - பாஜக கூட்டணி அமைய தான் காரணமாக இருந்ததால் மோடி, அமித்ஷா ஆகியோரிடம் தன்னுடைய பொலிட்டிக்கல் க்ராப் உயர்ந்துள்ளதாகவும் ரஜினி நினைப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படி சினிமா மட்டும் இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள்ளும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் தனக்கு விஜய் கூட்டணிக்குள் வந்தால் பவர் குறைந்து விடும் என்று நெருங்கிய வட்டாரங்களில் ரஜினி புலம்பி வருவதாகவும் அதனால் எக்காரணத்தைக் கொண்டும் விஜயை இந்த கூட்டணியில் இணைய விட கூடாது என்று ரஜினி தீவிரமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola