Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!
நடிகர் ரஜினிகாந்திற்கு இன்று இதயம் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், நேற்று மாலை அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மருத்துர்களுடன் கலந்தாலோசித்து திட்டமிட்டு தான், ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அவருக்கு இதயம் தொடர்பன சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், தற்போது வரை ரஜினியின் உடல்நிலை நிலையாக இருப்பதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திடீரென உடல்நலம் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் போலி எனவும், ஏற்கனவே உடலில் அவ்வப்போது ஏற்படும் சில அசவுகரியங்களுக்கான சிகிச்சைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பிட்ட சிகிச்சை முறைக்கு பிறகு இன்று காலை, ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவசர நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வெளியான, முதற்கட்ட தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. ஆனால், அது உண்மை இல்லை எனவும், திட்டமிடப்பட்ட சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் என்றும் தெரிய வந்திருப்பது ரசிகர்களை நிம்மதி அடைய செய்துள்ளது. சிகிச்சைக்குப் பிறகு 2-3 நாட்களில் ரஜினி வீடு திரும்புவார் எனவும், சுமார் 2 வார கால ஓய்விற்குப் பிறகு மீண்டும் திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.