Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல் நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1996 ல் குரல் கொடுத்தது போல 2026 இல் அரசியலுக்கு வந்தால் நிச்சயமாக உழைக்கத் தயார் என்று கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் துணைவியார் லதா ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மதுரையைச்  சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றத்தினர் மதுரை தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய இரட்டை விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்த பிறகு ரஜினிகாந்த் மனவியுடன் நீடூடி வாழ தேங்காய் உடைத்த பிறகு,108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில்  வெற்றிலை மாலை துளசி மாலை உள்ளிட்டவைகளை பெருமாளுக்கு சாட்சி சிறப்பு பூஜைகள் செய்தனர். பின் அங்கே வந்த பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பேசும்போது 1996 இல் எவ்வாறு குரல் கொடுத்தாரோ அதேபோன்று வரக்கூடிய தேர்தலிலும் அவர் குரல் கொடுப்பாரேயானால் நிச்சயம் நாங்கள் தேர்தலுக்காக பணி செய்ய தயார் கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola