Rahul Gandhi | 5 நிமிட வீடியோ சம்பவம்..மோடியை அழைக்கும் ராகுல் காரணம் என்ன?
மோடி மணிப்பூர் போங்க, பிரச்சினைகளை கேளுங்க என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரதமருக்கு வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்கு சென்று அங்குள்ள மக்களின் பிரச்சனைகளை கேட்டறிய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். அதோடு, மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வலியுறுத்துவதை I.N.D.I.A. கூட்டணி உறுதி செய்யும் என்று ராகுல் காந்தி எக்ஸ் தள பதிவில் குறிப்பிடுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணிப்பூர் சென்று அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மணிப்பூருக்கு சென்று அங்குள்ள மக்கள், முகாம்களில் உள்ளவர்களை சந்தித்து பேசிய வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடுள்ளார்.
மணிப்பூரில் வன்முறை வெடித்ததில் இருந்து நான் இங்கு வருவது இது மூன்றாவது முறையாகும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை
இன்றும் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் எரிகின்றன, அப்பாவிகளின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் வாழத் தள்ளப்படுகின்றனர்.
பிரதமர் மணிப்பூருக்கு நேரில் சென்று, மாநில மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்து, அமைதிக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியும் இந்திய கூட்டணியும் மணிப்பூரில் அமைதியின் அவசியத்தை பாராளுமன்றத்தில் முழு பலத்துடன் எழுப்பி இந்த அவலத்தை முடிவுக்கு கொண்டுவர அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்.