Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!
திருப்பதி லட்டில் மாடு உள்ளிட்ட விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது உறுதியானது ஆந்திர அரசியலில் புயலை கிளப்பியுள்ள நிலையில், முதல்வர் சந்திரபாபுவின் குற்றச்சாட்டுகளுக்கு லட்டில் கலப்படம் செய்யப்பட்டது ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும் என ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
திருப்பதி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது அங்கு பக்தர்களுக்கு பிரதாமாக வழங்கப்படும் லட்டு தான். இந்த சுவைமிக்க உணவிற்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.அத்தகைய பெரும் பாரம்பரியத்தை கொண்ட லட்டு பிரசாதத்தை சுற்றி தற்போது பூதாகரமான சர்ச்சை வெடித்துள்ளது. பெருமானுக்கு நெய்வேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முந்தைய ஜெகன் மோகன் ஆட்சி நிர்வாகமே காரணம் என அவர் சாடியிருந்தார். இதைத்தொடர்ந்து வெளியான ஆய்வு முடிவுகளும் லட்டில் மாடு மற்றும் பன்றியின் கொழுப்புகள் கலக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தது.இது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதுகுறித்து காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது.. திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா கோவிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் வேதனையளிக்கின்றன.திருப்பதியில் உள்ள கடவுள் பாலாஜி இந்தியாவிலும், உலகமெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான பக்தர்களின் விருப்பத்திற்குரிய தெய்வமாக இருக்கிறார். இந்தக் கலப்பட பிரச்சினை ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும். இந்த விவகாரம் முழுமையாக கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள அரசு அதிகாரிகள் நமது மதத் தலங்களின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.