Rahul gandhi apology: ”என்னை மன்னிச்சிடுங்க” THUGLIFE செய்த ராகுல்! மோடி கொடுத்த ரியாக்ஷன்
நாங்கள் வெளியுறவுத்துறை அமைச்சரை அமெரிக்காவுக்கு அனுப்பி பதவியேற்பு விழாவுக்கு எங்கள் பிரதமரை அழையுங்கள் என கேட்க மாட்டோம்
நாங்கள் இதற்காக வெளியுறவுத்துறை அமைச்சரை 3, 4 தடவை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க மாட்டோம்
தொழில்நுட்ப வசதிகளைன் மேம்படுத்துவதிலும், உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்
அப்படி செய்தார் அமெரிக்க அதிபரே நேரடியாக வந்து பிரதமருக்கு அழைப்பு விடுப்பார்
எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேச்சுக்கு அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் எதிர்ப்பு
எதிர்க்கட்சி தலைவர் இதுமாதிரியான ஆதாரமற்ற விஷயங்களை பேசக் கூடாது
இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவை பற்றியது
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவுக்கு பிரதமருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு பற்றி அவர் ஆதாரமற்றவற்றை சொல்கிறார்
ராகுல்காந்தி பொறுப்புடன் பேச வேண்டும்
வெளியுறவுத்துறை அமைச்சர் இதற்காக தான் அமெரிக்கா போனார் என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா?
அப்படி ஆதாரம் இருந்தால் யார் அவருக்கு இதை சொன்னார் என்பதை ராகுல்காந்தி அவையில் தெரிவிக்க வேண்டும்
கிரண் ரிஜிஜு பேச்சுக்கு நாடாளுமன்றத்திலேயே பதிலடி கொடுத்த ராகுல்காந்தி
எனது கேள்வி உங்களை தொந்தரவு செய்திருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்
உங்கள் மன அமைதியை கெடுத்ததற்கான மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்
பரவாயில்லை, நான் மன்னிப்பு கேட்டு விட்டேன்
ராகுல்காந்தி பேசியதும் மீண்டும் எழுந்து எதிர்ப்பு தெரிவித்த கிரண் ரிஜிஜு
நாட்டிற்கு தேவையான முக்கியமான விஷயத்தை பேசும் போது ராகுல்காந்தி இப்படி பதில் சொல்லக் கூடாது