Rahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்

Continues below advertisement

அம்பானி மகன் திருமணத்தில் கோடிக்கணக்கில் செலவழிக்கப்பட்ட பணம் யாருடையது என்று உங்களுக்கு தெரியுமா என கேட்டு பிரதமர் மோடியை விளாசியுள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி.

ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அதனால் வரவிருக்கும் தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என தீவிரமாக வேலை பார்த்து வருகிறது காங்கிரஸ். காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஹரியானாவில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்த போது அதனை எதிர்த்து போராடியவர்களில் ஹரியானா விவசாயிகளின் பங்கு அதிகம். விவசாயிகள் பாஜக மீது அதிருப்தியில் இருப்பதாகவும், இந்த முறை பா.ஜ.க-வுக்கு தேர்தல் களம் அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை என்றும் சொல்கின்றனர். இதனை வைத்து காங்கிரஸ் கட்சியினரும் விவசாயிகளை சுற்றியே தங்களது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் எம்.பி ராகுல்காந்தி பகதுர்கர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ’அம்பானி இல்ல திருமணத்தை பார்த்தீர்களா? அம்பானி மகனின் திருமணத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளார். அதெல்லாம் உங்களுடையெ பணம் தான். நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வதற்காக வங்கியில் கடன் வாங்குகிறீர்கள். ஆனால் பிரதமர் மோடியோ குறிப்பிட்ட 25 பேர் மட்டும் திருமணத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளார். ஆனால் விவசாயிகள் மட்டும் கடனில் மூழ்கி தான் திருமணத்தை நடத்தி முடிக்க முடியும். இது அரசியலமைப்பு மீதான தாக்குதல் இல்லையென்றால் பிறகு என்ன?” என குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவே இதுவரை இப்படி ஒரு திருமணத்தை பார்த்ததில்லை என்னும் அளவில், உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி, ஷாருக்கான், அமிதாப், ரஜினிகாந்த், தோனி என இந்தியாவின் நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால் முகேஷ் அம்பானி நேரில் சென்று அழைப்பு விடுத்தும் ராகுல் காந்தி அதில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டது பேசுபொருளாக மாறியிருந்தது. இந்தநிலையில் அம்பானி திருமணத்தை வைத்து பாஜகவினரை சரமாரியாக விமர்சித்து வருகிறார் ராகுல்காந்தி.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram