Rahul Gandhi Martial Art | புரூஸ்லீ ஆக மாறிய ராகுல்! வியந்து பார்த்த சிறுவர்கள்!ராகுலின் MASTER MODE

Continues below advertisement

பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது மாணவர்களுக்கு jiu-jitsu தற்காப்பு கலை கற்றுக் கொடுத்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி. 

ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுத்த நிலையில், அடுத்ததாக வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மேற்கொண்டார். மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் பேசி குறைகளை கேட்டறிந்தது வரவேற்பை பெற்றது. இந்த யாத்திரையின் போது தினமும் மாலை இந்த தற்காப்பு கலையை பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக ராகுல்காந்தி கூறியுள்ளார். ஆரம்பத்தில் ஆரோக்கியத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சி, நாளடைவில் சமூக நடவடிக்கையாக மாறியதாக குறிப்பிட்டுள்ளார். அதாவது யாத்திரை செல்லும் இடங்களில் எல்லாம் உள்ள மார்ஷியல் ஆர்ட்ஸ் மாணவர்களை வைத்து இந்த பயிற்சி நடந்துள்ளது. 

பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்காக, தற்காப்பு கலையை சிறுவயதிலேயே அறிமுகம் செய்வதே நோக்கமாக இருந்ததாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இன்று தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுவதையொட்டி, இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள ராகுல், அனைவரும் இதுபோன்ற கலைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram