Rahul Gandhi Annapoorna issue : ”ஆணவமா நிர்மலா? திமிர் பிடித்த பாஜக” எகிறி அடித்த ராகுல்

Continues below advertisement

ஆணவம் நிறைந்த மனிதர்கள் தாக்கபடும் போது, அவர்கள் எளியவர்களுக்கு அவமானத்தையே திரும்பி தருவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்துள்ளார் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி.

கோவையில்  சிறு, குறு தொழில் முனைவோர், பஞ்சாலை உரிமையாளர்கள்,விவசாயிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். அப்போது அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ஸ்வீட்டை விட காரத்திற்கு அதிக ஜிஎஸ்டி இருப்பதாகவும், பன்னுக்கு வரி இல்லை, ஆனால் அதற்குள் இருக்கும் கிரீமுக்கு வரி இருப்பதாகவும் சொல்லி ஜிஎஸ்டி வரியை ஒழுங்குபடுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் இதனை சிரித்துக் கொண்டே கேட்டனர். அதனால் அந்த நிகழ்வில் எந்த சர்ச்சையும் நடக்கவில்லை.

ஆனால் அதன் பின் அந்த வீடியோ சமூக வளைத்தளங்களில் பரவ, அவர் மிகவும் சரியான கருத்தை சொல்லியுள்ளதாக பலரும் பாராட்டினர். மேலும் அவரது பேச்சை சுட்டிக்காட்டி பாஜக தலைமையிலான அரசை விமர்சித்து கருத்துக்களை முன்வைத்தனர். இந்நிலையில் நிதியமைச்சரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார் அன்னபூர்ணா உணவக உரிமையாளர். நான் பேசிய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறினார் அவர். 

இந்தநிலையில் அரசுக்கு எதிரான கருத்தை சொன்னதற்காக ஒருவரை பாஜகவினர் வலுக்கட்டாயமாக மன்னிப்பு கேட்க வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசின் திட்டங்கள் மீது கேள்வி எழுப்பும் உரிமை மக்களுக்கு இல்லையா என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் தான் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் “கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர், நம் நாட்டின் மக்கள் பிரதிநிதியிடம் எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முறை தேவை என்று கேட்கும்போது, ​​அவரது கோரிக்கை ஆணவத்துடனும், அவமரியாதையுடன் எதிர்கொள்ளபடுகிறது.

அதே நேரம், ஒரு கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்க, அல்லது சட்டங்களை மாற்ற அல்லது தேசிய சொத்துக்களைப் பெற முயலும்போது, அவர்களை ​​மோடி ஜி சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்.

சிறு தொழில் வணிகர்கள் ஏற்கனவே பணமதிப்பிழப்பு, எளிதாக அணுக முடியாத வங்கி முறை, மோசமான திட்டங்களான ஜிஎஸ்டி மூலமாக வரியை பறிப்பது ஆகிய காரணங்களால் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். கடைசியாக இது போன்ற அவமானத்தையும் அவர்களுக்கு தந்து விட்டீர்கள்.

அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆணவம் காயப்படும்போது, ​​​​அவர்களுக்கு அவமானத்தையே திருப்பி கொடுக்க தெரிகிறது.

சிறு குறு மற்றும் நடுதர தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக இதிலிருந்து நிவாரணம் கேட்டு வருகின்றனர். இந்த திமிர்பிடித்த அரசாங்கம் மக்கள் சொல்வதைக் கேட்டால், ஒரே வரி விகிதத்துடன் கூடிய எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பதை புரிந்துகொள்வார்கள் என்று ராகுல் காந்தி காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே எம்.பி கனிமொழி, ஜோதிமணி, திருமாவளவன் என பலர் இந்த விவகாரத்தை எதிர்த்து குரல் கொடுத்துள்ள நிலையில், ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளது தேசிய அளவில் சூட்டை கிளப்பியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram