Rahul gandhi marriage | ”MARRIAGE ப்ளான் என்ன?” வெட்கப்பட்ட ராகுல்! விடாத மாணவிகள்

Continues below advertisement

திருமணம் எப்போது என மாணவிகள் எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அளித்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, முதன்முறையாக அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. வரும் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. காங்கிரஸ் கட்சி, பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி சேர்ந்து களமிறங்கியுள்ளன. தேர்தல் வேலைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி.

ஸ்ரீநகருக்கு பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி அங்கு மாணவிகளுடன் உரையாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் வரவிருக்கும் தேர்தல், ஜம்மு காஷ்மிரின் நிலை, பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசினார். அப்போது ராகுல்காந்திக்கு எப்போது திருமணம் என மாணவிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்து கொண்டே பதிலளித்த ராகுல், திருமணம் செய்து கொள்ளுமாறு இருபது, முப்பது ஆண்டுகளாக நிர்பந்தத்தை சந்தித்து வருகிறேன் என்றார். உடனே திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இருக்கிறதா என மாணவிகள் கேட்டதும், திட்டம் எதுவும் இல்லை, அதுவாக நடந்தால் நடக்கும் என பதில் கொடுத்தார். அப்படியென்றால் எங்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என ராகுலின் மாணவிகள் கேட்டதற்கு கண்டிப்பாக வைக்கிறேன் என்று சொன்னார். 

திருமணம் பற்றி ராகுல்காந்தி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களவை தேர்தல் சமயத்தில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் பிரச்சாரம் செய்த போதும், கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் திருமணம் பற்றி எழுப்பிய கேள்விக்கு விரைவில் நடக்கும் என்று சொன்னார் ராகுல். இதனை தொடர்ந்து தற்போது மாணவிகளும் திருமணம் பற்றி ராகுலிடமே நேரடியாக கேட்டுள்ளது வைரலாகி வருகிறது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram