மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராகப் போராடக் கூடாது என அருண் ஜெட்லி தன்னை மிரட்டிய போது, நீங்க யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்கனு தெரியுதா என வார்னிங் கொடுத்ததாக ராகுல் பேசியுள்ளார். ஆனால் வேளாண் சட்டம் வரும் போது எனது அப்பா உயிருடனே இல்லை என அருண் ஜெட்லி மகன் பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர சட்ட மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது வேளாண் சட்ட போராட்டம் பற்றி பேசிய போது அருண் ஜெட்லியை தன்னை மிரட்டியதாக சொல்லியிருந்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நான் போராடும் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது

இப்போது அந்த நபர் உயிருடன் இல்லை

அவரை பற்றி பேசக் கூடாது

இருந்தாலும் சொல்கிறேன்

அருண் ஜெட்லி என்னை மிரட்டினார்

நீங்கள் அரசுக்கு எதிராக வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடினால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என சொன்னார்

நான் அவரை பார்த்து, ‘நீங்கள் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என உங்களுக்கு தெரியவில்லை’ என சொன்னேன்

ராகுல்காந்தியின் பேச்சுக்கு பாஜக வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதுவும் 2019ல் அருண் ஜெட்லி இறந்து விட்ட நிலையில், 2020ல் வந்த வேளாண் சட்டங்களின் போது அவர் மிரட்டியதாக ராகுல் பொய்யாக பேசுவதாக போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி ராகுல்காந்திக்கு பதிலடி கொடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘வேளாண் சட்டங்கள் தொடர்பாக எனது மறைந்த தந்தை அருண் ஜெட்லி தன்னை மிரட்டியதாக ராகுல் காந்தி இப்போது சொல்கிறார். அவருக்கு ஒரு விஷயத்தை நினைவுபடுத்துகிறேன். எனது தந்தை 2019ல் உயிரிழந்தார். வேளாண் சட்டங்கள் 2020ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் மாற்று கருத்து கொண்ட ஒருவரை மிரட்டும் குணம் எனது தந்தைக்கு கிடையாது என தெரிவித்துள்ளார்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola