Rahul Gandhi | தேதி குறித்த ராகுல்அதானிக்கு ஆப்பு இப்போ பேசுங்க மோடி
தேதி குறித்த ராகுல்"அதானிக்கு ஆப்பு" "இப்போ பேசுங்க மோடி"
பாஜக ஆட்சியில் மோடியின் நண்பரான அதானியின் நிறுவனம் செய்த மாபெரும் நிலக்கரி ஊழல் அம்பலமாகியுள்ளது என ராகுல் காந்தி தனது எக்ஸ் வளைதளபக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல வருடங்களாக நடந்து வரும் இந்த மோசடி மூலம் மோடியின் அபிமான நண்பன் அதானி தரம் குறைந்த நிலக்கரியை 3 மடங்கு விலை உயர்த்தி விற்றதன் மூலம் அதானி நிறுவனம் கொள்ளை லாபம் அடித்துள்ளது.
அதானி நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி ஊழல் சாமானியர்கள் கூடுதல் மின்கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டதாகவும் ராகுல் காந்தி விளக்கம் கொடுத்துள்ளார். ED, CBI மற்றும் IT இந்த வெளிப்படையான ஊழலில் அமைதியாக இருக்க எத்தனை டெம்போக்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் சொல்வாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு, அதானி நிறுவனத்தின் இந்த மெகா ஊழலை இந்திய அரசு விசாரிக்கும். பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்து ஒவ்வொரு ரூபாயும் மீட்கப்படும் என ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.