Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?

Continues below advertisement

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், ஒலிவாங்கி அணைக்கப்பட்ட விவகாரம் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு,மக்களவையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மைக் அணைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.  அதன் காட்சி  X  வலைதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அதில் ராகுல் காந்தி பேசி கொண்டிருக்கும் போது, மைக் அணைக்கப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மைக்ரோஃபோனை ஆண் செய்யுமாறு ராகுல் கேட்டார்.  இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, லோக்சபாவில் எம்.பி.க்களின் மைக்ரோஃபோன்களுக்கு தான் பொறுப்பாளி கிடையாது என தெரிவித்தார். இதையடுத்து, மக்களவையில் அமளி நிலவியதால், அவையை இன்று சபாநாயகர் ஒத்திவைத்தார்.  

இந்நிலையில், அவையில் உறுப்பினர்கள் பேசும் மைக்கின் கன்ட்ரோல் யாரிடம் உள்ளது என கேள்வி எழ ஆரம்பித்தது.  ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒதுக்கப்பட்ட இருக்கை உள்ளது, மேலும் மைக்ரோஃபோன்கள், ஒவ்வொரு இருக்கைக்கையிலும் எண்ணுடன் பொருத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒலி தொழில்நுட்ப வல்லுநர்கள் அமரும் அறை உள்ளது. அவர்கள் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் நடவடிக்கைகளை பதிவு செய்யும் ஊழியர்களின் குழுவைச் சேர்ந்தவர்கள். இங்கிருந்துதான்,  இந்த அறையில் ஒதுக்கப்பட்ட இருக்கை எண்களுடன் கூடிய மின்னணு பலகை உள்ளது. மைக்ரோஃபோன்கள் இங்கிருந்து ஆன் அல்லது ஆஃப் செய்யப்படுகின்றன. இது ஒரு கண்ணாடி திரையை கொண்டுள்ளது. அங்கிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களைப் பார்க்க முடியும் என கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த ஊழியர்களால் மைக்குகள் ஆன் அல்லது ஆஃப் செய்யப்படுகின்றன என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.   "அவைத் தலைவரின் வழிகாட்டுதலின்படி மைக்ரோஃபோன்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவைத் தலைவர் ஒரு உறுப்பினரை அழைத்தால் மட்டுமே அவை இயக்கப்படும்" என்று திமுக ராஜ்யசபா எம்பியும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் ஆங்கில செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.  "பூஜ்ஜிய நேரத்தில், ஒரு உறுப்பினருக்கு மூன்று நிமிட நேர வரம்பு வழங்கப்படுகிறது, மேலும் மூன்று நிமிடங்கள் முடிந்ததும், மைக்ரோஃபோன் தானாகவே அணைக்கப்படும். ஒரு எம்.பி.யின் மைக்ரோஃபோன் பேசாத பட்சத்தில் அணைக்கப்பட்டிருக்கலாம் எனவும் வில்சன் தெரிவித்தார்.  லோக்சபா சபாநாயகரால் , சில சூழ்நிலையில் மைக்குகளை ஆன் மற்றும் ஆஃப் செய்ய முடியும் எனவும் எம்.பி வில்சன் தெரிவித்தார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram