Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவு
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடெல்லியில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தொழிலாளர்களுக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து வருகிறார். சாக்லேட் தொழிற்சாலை ஊழியர்களை சந்தித்தது, முடிதிருத்தம் செய்யும் கடைக்கு சென்றது, ரயில் நிலையத்தில் பெட்டி தூக்கும் தொழிலாளர்களை சந்தித்தது என அடுத்தடுத்து விசிட் கொடுப்பதற்கு மக்கள் மத்தியிலும் வரவேற்பு இருக்கிறது.
அந்தவகையில் ராகுல்காந்தி டெல்லியில் கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்களை சந்தித்து பேசினார். மேலும் அவர்களுடன் சேர்ந்து சிறிது நேரம் வேலை பார்த்தார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து பிரச்னைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, உழைப்புக்கு எல்லை இல்லை என்றும் நாட்டைத் தன் கையால் கட்டியெழுப்பும் இந்த சகோதரர்களுக்கு நீதியும், உரிமையும் கிடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் பணவீக்கத்தின் காரணமாக அவர்கள் குறைவான சம்பளத்திற்கு வேலை பார்க்கிறார்கள் என்றும், இந்தியாவின் தொழிலாளர்களுக்கு முழு உரிமை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுதான் தனது வாழ்க்கையின் நோக்கம் என்றும் ராகுல்காந்தி வீடியோவில் பேசியுள்ளார்.