Rahul gandhi Parliament speech | சபாநாயகர் போட்ட ஆர்டர்! THUGLIFE செய்த ராகுல்! டென்ஷன் ஆன பாஜகவினர்
மக்களவையில் பேசிய ராகுல்காந்தி, அம்பானி அதானியை வைத்து பாஜகனவிரை ரவுண்டு கட்டியதால் காரசாரமான விவாதம் ஏற்பட்டது. பெயர்களை சொல்லக் கூடாது என சபாநாயகர் உத்தரவிட்டதும் A1,A2 என ராகுல் சொன்னதால் இந்தியா கூட்டணியினர் ஆரவாரம் செய்து சிரித்தனர்.
பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மக்களவையில் உரையாற்றினார். அம்பானி, அதானிக்கு ஏத்த மாதிரி பிரதமர் மோடி வேலை செய்வதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் ராகுல்காந்தி மக்களவையிலும் இதுபற்றி பேசினார். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு குருச்சேத்திரம் நடந்தது. அதில் ஆறு நபர்கள் சக்கர வியூகத்தை அமைத்து அபிமன்யுவை கொன்றார்கள். அபிமன்யுவுக்கு என்ன நடந்ததோ தற்போது அது இந்தியர்களுக்கு நடக்கிறது. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், சிறு மற்றும் குறு தொழிலாளர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர். அபிமன்யுவை ஆறு நபர்கள் சேர்ந்து கொன்றார்கள். இன்றும் சக்கர வியூகத்தில் ஆறு நபர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் மோடி, அமித்ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி, அதானி என்று விமர்சித்தார் ராகுல்.
உடனே குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, சபையில் இல்லாதவர்களை பற்றி பேசக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். ராகுலின் பேச்சுக்கு பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். அதற்கு உங்களுக்கு தேவை என்றால் அவர்களை பெயரை தவிர்த்து விடுகிறேன் என்றார் ராகுல். ஆனால் மீண்டும் பேசும் போது அவர்கள் பெயரை குறிப்பிட்டதும் சபாநாயகர் குறுக்கிட்டதால் உடனே ஏ1, ஏ2 என்று கிண்டலாக கூறியதால் இந்தியா கூட்டணியினர் குலுங்கி சிரித்தனர். அவர்களை பற்றி பேசாமல் இருப்பது கஷ்டம், அதனால் இப்படி வேறு வழியில் அவர்களை அடையாளப்படுத்த விடுங்கள் என கேட்டார் ராகுல். உடனடியாக எழுந்த அமைச்சர் கிரண் ரிஜுஜு, சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் மரியாதை கொடுக்கவில்லை என ஆவேசமாக பேசினார்.
இதற்கு பதிலடி கொடுத்த ராகுல்காந்தி, ”தலைமை கொடுத்த உத்தரவின் அடிப்படையில் ஏ1, ஏ2 ஐ காப்பாற்றுவதற்காக அமைச்சர் பேசுகிறார்” என சொன்னதால் பாஜகவினர் கூச்சலிட்டனர். அம்பானி, அதானியை வைத்து பாஜகவினரை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், மக்களவையில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.