Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

Continues below advertisement

மஹாராஸ்டிராவில் ராகுல் காந்தி சாலையோர கடைக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்ததோடு அங்கு உணவு சமைத்துவிட்டு ஸ்நாக்ஸ் சாப்பிட்ட நிகழ்வு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஸ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அப்பகுதியின் பிரபல திண்பண்டம் ஆன போகாவை சாலையோர கடையில் சாப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி சாதாரண கடைகளுக்கு சென்று மக்களுடன் அன்றாட பிரச்சனைகள் குறித்து கேட்டறிவது வழக்கம். முன்னதாக ரோட்டோர சலூன் கடைகளில் முடி வெட்டுவது, லோக்கல் உணவகங்களில் உணவு அருந்துவது, செருப்பு தைப்பவரிடம் உரையாடுவது என சாமானியர்களுடம் மிக நெருக்கமாக பழகி வருகிறார். இந்நிலையில் தற்போது மஹாராஸ்டிராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் ராகுல், அங்குள்ள சாலையோர கடை ஒன்றில் அப்பகுதியின் பிரபல ஸ்நாக்ஸான போகாவை ருசித்து சாப்பிட்டுள்ளார்.

ஷ்யாம்ஜி ராம்ஜி போகா கடைக்கு முன்னறிவிப்பின்றி சர்ப்ரைஸாக சென்றுள்ளார் ராகுல். அங்கு சென்ற அவர், அங்குள்ள இளைஞர்களிடம் அரசியலமைப்பு, வேலை வாய்ப்பு, விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடினார்.

பின்னர் அங்குள்ள கிச்சனுக்கு சென்ற சமைத்த ராகுல், போகாவை ருசித்து சாப்பிட்டுள்ளார். அந்த உணவகத்தில் ராகுல் மக்களுடம் அமர்ந்து உண்ணும் புகைப்படங்களும் அவர் உணவு சமைக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram