Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை தனி அரசியல் கட்சி தொடங்குவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், ரஜினிகாந்தின் மருமகன் அண்ணாமலையுடன் கைக்கோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஒரே மாதத்தில் பாஜகவில் இருந்து விலகினார். இளைஞர்களின் இன்ஸ்பிரேசனாக வலம்வந்த அண்ணாமலை தனது தனி அரசியல் கட்சி தொடங்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார். அதில் முதற்கட்டமாக, 'வி தி லீடர்ஸ்' (We The Leaders) என்ற புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கி அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளார். தவெக தலைவர் விஜய் ஆட்சியை பிடித்து மிகப்பெரிய மாற்றத்தை அரசியல் களத்தில் ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்ணாமலை அடுத்த மாற்றத்தை கொண்டு வரும் நோக்கில் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதனிடையே அண்ணாமலையின் இந்த புதிய இயக்கத்தில் இளைஞர்கள் அரசியல் பிரமுகர்கள் பிரபலங்கள் என சுமார் 25 லட்சம் பேர் இணைந்து அவரது அரசியல் கட்சிக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். இந்நிலையில் அண்ணாமலையின் இந்த இயக்கத்தில் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் கணவன் விசாகன் வணங்காமுடி விரைவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விசாகன் வணங்காமுடி பெரிய தொழிலதிபர், மற்றும் அப்பெக்ஸ் லேபரட்டரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார். இவர் அண்ணாமலையுடன் கைக்கோர்க்கும் பட்சத்தில் கார்ப்பரேட் மற்றும் தொழில்நுட்பம் பின்னணி கொண்ட இளைஞர்கள் கூட்டத்தை இந்த இயக்கத்தை நோக்கி ஈர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் பின்னணியில் நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு இருக்கலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
காரணம், முன்னதாக ரஜினிகாந்த அரசியல் கட்சி தொடங்க இருந்த போது அதில் அண்ணாமலை இணைவதாக இருந்தது. ஆனால் பி.எல்.சந்தோஷின் அழைப்பின் பேரில் அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது தான் அரசியலுக்கு வராத நிலையில், தனது அரசியல் தத்துப்பிள்ளையாக அண்ணாமலையை களமிறக்குகிறாரா ரஜினி எனவும் பேசி வருகின்றனர். அதன் பேரிலே அவரது மருமகனை அண்ணாமலை டீமில் இணைத்து தனது ஆதரவை மறைமுகமாக தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
மேலும், நாளை மறுநாள் ராகவா லாரன்ஸ் தனது வாழ்வின் முக்கிய முடிவை காலை 10 மணிக்கு அறிவிக்கப்போவதாக கூறியுள்ளார். அவரது அரசியல் பிரவேசம் குறித்த அப்டேட் தான் அது என அனைவரும் எதிர்பார்க்கும் சூழலில், அண்ணாமலை டீமில் லாரன்ஸ் இணையப்போகிறார் என்ற தகவல்களும் தற்போது பரவி வருகிறது. நடிகர் லாரன்ஸ் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஒருவேளை லாரன்ஸ் அண்ணாமலையுடன் இணைந்தால் அண்ணாமலையின் அந்த புதிய கட்சி ரஜினிகாந்த் ஆசியுடனும் ஆதரவுடனும் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















