PTR on Trichy flight landing : எனக்கும் திக் திக் அனுபவம் விமானிகளின் புத்திசாலித்தனம்”
திருச்சியில் ஏர் இந்தியா விமானத்தை சாதுர்யமாகவும் தைரியமாகவும் தரை இறக்கிய விமானிகளை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பாராட்டியுள்ளார். இதே போல் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு ஒரு திக் திக் அனுபவம் குறித்து மனம் திறந்து பதிவிட்டுள்ளார்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து சார்ஜாவிற்கு நேற்று மாலை 5:40 மணிக்கு 144 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது திடீரென அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானத்தின் டயர்கள் விமானம் வானில் பறக்க தொடங்கிய பிறகும் உள்ளிழுத்துக் கொள்ளாமல் சிக்கலைக் கொடுத்திருக்கிறது. அதிக எரிபொருளுடன் உடனடியாக தரையிறங்க முடியாததால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வானிலேயே வட்டமடித்த விமானம் இரவு 8.15 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது
இந்த நிலையில் இந்த சம்பவத்தின் போது தைரியாமாகவும் சாதுர்யமாகவும் விமானத்தை கையாண்டு தரையிறக்கிய விமானிகளை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பாராட்டியுள்ளர். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் நெருக்கடியான காலத்தில் விமானத்தை பாதுக்காப்பாக தரையிறக்கிய விமானிகளின் புத்திச்சாலிதனம் மற்றும் விமானத்தை பாதுக்காப்பாக தரை இறக்க உதவிய திருச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கு எனது பாராட்டுக்கள்” என தெரிவித்துள்ளார்,
இதே போல தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு விமான நிகழ்வு குறித்தும் அவர் கூறியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாகவே விமானத்தில் அடிக்கடி பயணித்து வருகிறேன். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னாள் எனக்கும் இதே போன்ற ஒரு நிகழ்வு நடந்தது, ஏர்பஸ் ஏ350 ரக விமானத்தில் கேப் டவுன் நகரிலிருந்து புறப்பட்டோம், ஆனால் எதிர்ப்பாராத விதமாக விமானத்தில் எரிப்பொருளானது தீர்ந்து போகவே உடனடியாக டர் எஸ் சலாம் என்கிற ஒரு சிறிய விமான நிலையத்தில் இறங்க முடிவு செய்தோம். பெரிய விமானங்களை தரையிறக்க வசதியில்லாத அந்த விமான நிலையத்தில் எங்கள் விமானம் பாதுக்காப்பாக தரையிறங்கியது. ஆனால் அந்த விமான நிலையத்தில் ஏ350 ரக விமானங்களில் எரிப்பொருள் வால்வுகளை திறக்க சரியான தொழிநுட்ப வல்லுநர்கள் யாரும் இல்லாமல் இருந்தனர். அதன் பின் நீண்ட நேரம் போராடி விமானத்துக்கு தேவையான எரிப்பொருள் நிரப்பப்பட்டு நான் செல்லும் இடத்துக்கு விமானம் சென்றடைந்தது.
ஆகவே மிகுந்த பெருமையோடு மீண்டும் சொல்கிறேன் - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான குழுவிற்கும், திருச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கும் எனது வாழ்த்துகள் என்று பிடிஆர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.