ABP News

PTR inaugurates public toilets | ”எங்கடா இங்கிருந்த TOILET”அதிர்ந்து போன PTR முழித்த அதிகாரிகள்

Continues below advertisement

மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியகராஜன் திறப்பதற்கு முன்னரே கழிப்பறை திருடப்பட்ட சம்பவன் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையை நல்லா விசாரிக்க சொல்லுங்க திருடன் பக்கத்திலேயே இருப்பான் என்று கடிந்து கொண்டுள்ளார்.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் சொந்த தொகுதியான மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி கட்டப்பட்ட கழிவறைகள்  பணிகள் முடிவடைந்த நிலையிலும் தேர்தல் காரணங்களால் பல மாதங்களாக திறக்கப்படாமல் இருந்தது .

இந்நிலையில் இன்று மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 30 லட்சம் மதிப்பீட்டில் மத்திய சட்டமன்ற உறுப்பினரின் நிதியிலிருந்து கட்டப்பட்ட கழிவறைகளை அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன்  திறந்து வைத்தார் இதில் மேயர் , மாநகராட்சி ஆணையாளர் கலந்து கொண்டனர்.

கழிவறைகளை அமைச்சர் திறந்து வைத்த பின்பாக உள்ளே சென்று ஆய்வு செய்தபோது கழிவறைகளில் பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் சில சேதமடைந்திருந்தன சில இடங்களில் குழாய்கள் பொருத்தப்படாமல் இருந்தன.

இதனை பார்த்த அமைச்சர் அதிகாரிகளை அழைத்து என்ன இது குழாய்களை காணவில்லை என கேட்டபோது குழாய்களை சிலர் திருடி சென்று விட்டார்கள் என  விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து ஆண்கள் சிறுநீர் கழிவறை பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டபோது சிறுநீர் பிறையில் கை கழுவும் குழாய்களை பொருத்தியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமைச்சர் என்ன இது இதனை இங்கு வைத்திருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

கை கழுவும் குழாயை உடனடியாக  அகற்றிவிட்டு கழிவறைகளில் பயன்படுத்தும் குழாய்களை பொறுத்த வேண்டுமென என கடிந்து கொண்டார். அமைச்சர் வந்து கழிவறையை திறந்து வைப்பதற்கு முன்பாக முறையாக அதனை ஆய்வு கூட செய்யாத அதிகாரிகளில் அலட்சிய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola