Priyanka Gandhi Palestine bag : முட்டாள்தனமா பேசாதீங்கபாலஸ்தீன கொடியுடன் பிரியங்காஎதிர்கட்சிகளுக்கு நெத்தியடி பதில்

Continues below advertisement

பாலஸ்தீன கொடி பொறித்த பையுடன் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி நாடாளுமன்றத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர், உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி வருகிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே, கடந்த 2023ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி, மோதல் தொடங்கியது. தாக்குதலை ஹமாஸ் தொடங்கியிருந்தாலும், அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் நடத்தி வரும் போர், அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ளது. இஸ்ரேலுடன் இணக்கமாக செயல்பட்டு வரும் அதே நேரத்தில், பாலஸ்தீனியர்களுக்கு பல்வேறு வகையில் இந்தியா உதவி வருகிறது. இந்த விவகாரத்தில் இஸ்ரேல் மீது காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடருக்கு பாலஸ்தீன கொடி பொறித்த பையுடன் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வந்தது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதை வைத்து பாஜக கடும் விமர்சனங்களை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பாஜகவின் தேசிய ஐடி பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா கூறுகையில், "நாடாளுமன்றத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி அதன் சின்னம் பொறித்த பையை கொண்டு வருவது ராகுல் காந்தியை விட அவர் ஒரு பெரிய பேரழிவு என்பதை உணர்த்துகிறது. அது சரிதான். மதவெறியுடன் செயல்பட்டுவிட்டு முஸ்லீம்களுக்கு சிக்னல் கொடுப்பது இப்போது ஆணாதிக்கத்திற்கு எதிரான நிலைப்பாடாக மறைக்கப்பட்டுள்ளது" என விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி அளித்துள்ள பிரியங்கா காந்தி, "வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைப் பற்றி ஏதாவது செய்யச் சொல்லுங்கள். வங்கதேச அரசாங்கத்துடன் பேசுங்கள். முட்டாள்தனமான விஷயங்களைச் சொல்லாதீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram