ABP News

DMDK Alliance DMK | விடுறா வண்டிய அறிவாலயத்துக்குரூட்டை மாற்றிய பிரேமலதா?பதற்றத்தில் EPS! | Stalin

Continues below advertisement

’’எங்களுக்கு சீட் தரமாட்டீங்களா? எங்க பவர் என்னனு தெரியுமா’’ என தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் இல்லை என ஈபிஎஸ் கூறியதால் ஆவேசமான பிரேமலதா விஜயகாந்த் காரை அறிவாலயம் பக்கம் விட்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆட்டம் காட்ட முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறது. அதே நேரத்தில் கூட்டணி கணக்குகளையும் போட்டு வருகின்றனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிக கடந்த 2024 மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்தது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதே கூட்டணியில் தொடரும் முடிவில் இருந்த வந்த பிரேமலதாவுக்கு எடப்பாடி கொடுத்த பதில் ஒன்று அதிருப்தியை கொடுத்துள்ளது.

இன்னும் சில மாதங்களில் ராஜ்ய சபா எம்பிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எப்படியும் தங்களுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் கன்ஃபார்ம் என நினைத்துக் கொண்டிருந்தார் பிரேமலதா. அதிமுக கூட்டணியில் தொடர இதுவும் ஒரு முக்கிய பாயிண்டாக இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த எடப்பாடி பழனிச்சாமியிடம் தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எடப்பாடி நாங்க எப்போ கொடுக்குறோம்னு சொன்னோம் என்று கூறி பிரேமலதாவுக்கு ஷாக் கொடுத்தார். இதனால் கடும் கோபமடைந்த பிரேமலதா எடப்பாடிக்கு ஆட்டம் காட்ட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திமுக கூட்டணியை எதிர்க்க பலம் வாய்ந்த கூட்டணி அதிமுகவுக்கு தேவை. எப்படியாவது பாமகவை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடி உள் வேளைகளை பார்த்து வருகிறார். இந்நிலையில் தான் ராஜ்ய சபா குறித்து எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என பேசியிருக்கிறார். 
ஒருவேளை இந்நேரத்தில் தேமுதிகவும் கூட்டணியை விட்டு விலகினால் அது அதிமுகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்.

இந்த சூழலில் ஈபிஎஸ் மீதுள்ள அதிருப்தி காரணமாக வண்டியை அறிவாலயம் நோக்கி விட்டுள்ளார் பிரேமலதா. தமிழக பட்ஜெட்டை வரவேற்பதாக தெரிவித்தது, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழக அரசுடன் இனைந்து நிற்போம் என ப்ரஸ்மீட் கொடுத்தது என திமுகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் திமுக கூட்டணிக்கு செல்ல தேமுதிக முடிவெடுத்து விட்டதாக தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.

ஒருவேளை தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைந்தால் அது எடப்பாடிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். இதனால் சைலண்டாக பிரேமலதாவை சமாதானப்படுத்துவாரா இல்லை அடுத்த தலைவலியில் சிக்கிக்கொள்வாரா ஈபிஎஸ் என்பதை பொறுத்திருந்து காணலாம்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram