Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி ஜன் சூராஜ் கட்சித் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி தேசிய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு சமீபத்தில் மஹாராஸ்டிரா,ஹரியானா,பீகார் உள்ளிட்ட பல மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது..இந்நிலையில் கட்சியை மீட்டெடுக்கும் கட்டாயத்தில் உள்ள காங்கிரஸ் தலைமை புதிய ரூட்டை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது..
இதனையடுத்து காங்கிரஸ் எம் பியும் மூத்த தலைவருமான பிரியங்கா காந்தி பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறி வச்சா இரை விழனும் என்பதற்கேற்ப பிரதமர் நரேந்திர மோடி முதல் முதல்வர்கள் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி என பலருக்கும் வியூகங்களை வகுத்து கொடுத்து வெற்றி வாகை சூடவைத்தவர் பிரசாந்த் கிஷோர். பின்னர் பிறருக்கு வழிவகுத்து கொடுப்பதை நிறுத்திவிட்டு தானே சொந்தமாக அரசியலில் இறங்கினார் பிகே.
தனியாக சன் சூரஜ் கட்சி என்னும் அரசியல் கட்சியை தொடங்கி பிஹார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.
பீகார் தேர்தல் காங்கிரஸுக்கும் சரி பிகேவுக்கும் சரி பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பல அரசியல்வாதிகளை அரியனையேற்றிய பிரசாந்த் கிஷோரால் தனது சொந்த கட்சியை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வைக்க முடியவில்லை. ஜன் சுராஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் 61 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது பேசுபொருளானது. இந்நிலையில் தான் பிரசாந்த் கிஷோர் பிரியங்கா காந்தி சந்திப்பு அரங்கேறியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆக மோடிக்கு ரூட்டு போட்டுக்கொடுத்த பிகே தற்போது காங்கிரஸுக்கு கைகொடுக்க போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முன்னதாக பிஹாரில் லாலு பிரசாத் யாதவ்- நிதிஷ்குமார் ஐ ஒன்றிணைத்து தேர்தலில் வெற்றி பெற வைத்து மாஸ் காட்டியவர் பிரசாந்த் கிஷோர்
இந்நிலையில் பிரஷாந்த் கிஷோர்-ன் இந்த எண்ட்ரி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக பிரிந்து கிடக்கும் எதிர்கட்சிகளை மீண்டும் ஒன்றிணைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
மேலும் 2021 காலகட்டங்களில் பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியை கட்டமைப்பை அடிப்படை பலவீனங்களை சரி செய்து மறு சீரமைக்கும் உத்திகள் அடங்கிய ஒரு ஆய்வறிக்கையை சோனியா காந்தியிடம் சமர்ப்பித்தார்.
அப்போது சோனியா காந்தி ஒரு குழு அமைத்து அந்த குழுவில் இணைந்து அரசியல் பணியாற்ற பிரஷாந்த் கிஷோரை கேட்டுக்கொண்டார். ஆனால் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் தலையீடு காரணமாக தனது திட்டங்களை செயல்படுத்தும் சுதந்திரம் இல்லை என்று பிரஷாந்த் கிஷோர் அதனை நிராகரித்துவிட்டார்.. இந்நிலையில் தற்போது இரு கட்சிகளும் தேர்தல் அரசியலில் பின்னடைவை சந்தித்தித்திருக்கும் நேரத்தில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸுக்குள் தேர்தல் வியூக வகுப்பாளராக களமிறங்குவாரா அல்ல காங்கிரஸில் இணைந்து எதிர்க்கட்சிகளுக்கு ஆட்டம் காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து காணலாம்.