Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”
சார் நீங்க எந்த விங்ல இருக்கீங்க என தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், தன்னை குறித்து விமர்சனம் செய்த அரசியல் விமர்சகரான சுமந்த்.சி.ராமனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் வானிலை தொடர்பான கணிப்புகளை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு வருவார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு நேர்க்காணலில் பேசிய அவர் சென்னையில் 40 செண்டிமீட்டர் மழை பெய்தால் நிச்சயம் தண்ணீர் தேங்க தான் செய்யும், சாலைகளில் உள்ள தண்ணீர் வடியவே வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளதே தவிர மழைக்கு அல்ல என கூறியிருந்தார்.
மேலும் சென்னையில் நான்கு நீர் தடங்கள் வழியாகவே தண்ணீர் வெளியேறுகிறது. அதனால் சென்னையில் 15 செ.மீ மழை பெய்தால் மட்டுமே தாங்க முடியும். 20 செ.மீ மழை பெய்தால் ஒரு நாள் நீர் தேங்கும், 30 செமீ மழை பெய்தால் புளியந்தோப்பு, முடிச்சூர் போன்ற இடங்களில் கண்டிப்பாக மழை நீர் தேங்கும். 40 செமீ அளவுக்கு மழை பெய்தால் நான்கு நாட்களுக்கு நீர் தேங்கும் நிலைமையில் தான் சென்னை உள்ளது. மழைநீர் வடிகால்கள் சாலைகள் தேங்கும் நீரை எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள்து. 40 செமீ அளவுக்கு பெய்யும் மழைக்கு வடிகால் அமைக்க முடியாது மக்கள் தான் முன்னெரிச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்று தெரிவித்தார்.
மேலும், பிரதீப் ஆளும் கட்சிக்கு ஆதரவாக பேசி வருவதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக அரசியல் விமர்சகரான சுமந்த் சி ராமன் பிரதீப் ஜானை தொடர்ந்து செய்து வந்தார். இந்த நிலையில் சுமந்த் சி ராமன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரசியல் கட்சிகள் தங்களுக்கென்று டாக்டர்ஸ் விங், வழக்கறிஞர் விங் என்று வைத்துள்ளானர். அந்த வகையில் இப்போது புதுசாக வெதர் விங் எல்லாம் ஆரம்பித்து இருக்கிறார்கள் பிரதீப் ஜானை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பிரதீப் ஜான் சார் நீங்க எந்த விங்ல இருக்கீங்க, பூமர் விங் ஆ இல்ல ஆல் இன் ஆல் எக்ஸ்பெர்ட் விங் சும்மா நொய் நொய்ன்னு பேசாதீங்க என்று பதிலடி கொடுத்துள்ளார்.
ஏற்கெனவே தன்னை எந்தவொரு அரசியல் கட்சியை வைத்து பிராண்ட் செய்ய வேண்டாம் எனவும் இந்த ஆட்சிக்கு ஆதரவானவன் என முத்திரை குத்த வேண்டாம் எனவும் மழை குறித்த டேட்டகள் மற்றும் ஆதாரம் இருந்தால் வாருங்கள் உங்களுடன் விவாதிக்க நான் தயார் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.