வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி உயிர் தப்பிய பாமக ம.க.ஸ்டாலின் ஆடுதுறை பேருராட்சியில் பரபரப்பு | PMK Stalin

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி, பேரூராட்சி தலைவரும், பாம.க., மாவட்ட செயலாளருமான ம.க.ஸ்டாலினை கொல்ல முயற்சி நடந்துள்ளது. இதனை அறிந்த பாமக தொண்டர்கள் டயர்களை சாலை நடுவில் வைத்து கொளுத்தி மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடுதுறையில் பேரூராட்சி தலைவர் ம க ஸ்டாலின் இன்று பேரூராட்சி அலுவலகத்தில் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென காரில் வந்த கும்பல் வெடிகுண்டு வீசி அறிவாளால் தாக்குதலில்ஈடுபட்டனர் இதில் அங்கு இருந்தஇளையராஜா அருண் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் வெடிகுண்டு வீசும் போது நூல்யிழையில் உயிர்தப்பித்த மா கா ஸ்டாலின் அங்கிருந்து தப்பி பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளார்.தகவல் அறிந்து அங்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கூடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து கொலை முயற்சி ஈடுபட்ட கும்பலை கைது செய்ய வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் தகவல் அறிந்ததும் ஆடுதுறையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கும்பகோணம் மயிலாடுதுறை சாலை பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது.

ஆடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க. ஸ்டாலினை கொலை செய்யும் முயற்சியில் வெடிகுண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யும் வரை பாமக வன்னியர் சங்கத்தினர் போராட்டம் தொடரும் என்று வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மதி விமல் தெரிவித்துள்ளார். 

மேலும் சாலை மறியல்செய்தவர்களிடம் மா க ஸ்டாலின் நேரில் வந்து சாலை மறிகளை கைவிட கோரி வற்புறுத்தினார். அதற்குள் அவரின் ஆதரவாளர்கள் கும்பகோணம் மயிலாடுதுறை மெயின் சாலையில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலையின் நடுவே டயர்களை கொளுத்தி தனது எதிர்ப்பை பதிவு செய்தனர். உடனடியாக அந்த இடத்திற்கு வந்த மா கா ஸ்டாலின் அவ்வாறு செய்வது தவறு போராட்டத்தை உடனே கை விடுங்கள் என கூறியதை அடுத்து போராட்டம் செய்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola