PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்
அசாம் உட்பட முழு வடகிழக்குமே இந்தியாவின் அஷ்டலட்சுமிகள். வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மூலம் முடிவுகளை ஒருபோதும் கொண்டு வர முடியாது என பிரதமர் மோடி பேசியுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
போடோலாந்து மஹாஉத்சவ் என்பது டெல்லியில் உள்ள SAI இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் முதல் மாபெரும் கலாச்சார விழா. டெல்லியில் நடைபெற்ற முதல் போடோலாந்து திருவிழாவில் கலந்து கொண்ட மோடிக்கு போடோ சமூக மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 2020 ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு வன்முறையைத் தவிர்த்து அமைதியின் பாதையை தேர்வு செய்ததற்காக போடோ சமூக மக்களை பாராட்டிய மோடி, அசாம் மற்றும் வடகிழக்கு பகுதிகளை இந்தியாவின் அஷ்ட லட்சுமிகள் என புகழ்ந்து பேசியுள்ளர்.
இதைத் தொடர்ந்து போடோலாந்து மஹோத்சவின் தொடக்க விழாவில் பேசிய மோடி, அமைதி உடன்படிக்கைகள் காரணமாக, அசாமில் மட்டும் 10,000 இளைஞர்கள் ஆயுதங்களையும் வன்முறையையும் கைவிட்டுள்ளனர். போடோலாந்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ரூ.1,500 கோடி வழங்கியுள்ளது.போடோலாந்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.700 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, போடோலாந்து வளர்ச்சி அலைகளை கண்டுள்ளது.
போடோ அமைதி ஒப்பந்தம் உங்களுக்கு மட்டும் பயனளிக்கவில்லை, பல சமாதான உடன் படிக்கைகளுக்கு புதிய வழிகளைத் திறந்து வைத்துள்ளது. அது காகிதங்களில் மட்டுமே இருந்திருந்தால், மற்றவர்கள் என்னை நம்பியிருக்க மாட்டார்கள்.
வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மூலம் முடிவுகளை ஒருபோதும் கொண்டு வர முடியாது என்று போடோ சமூகம் வழி காட்டியுள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.