PM Modi Speech : ’’ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்’’சர்ச்சையை கிளப்பும் மோடி!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புல்டோசரை வைத்து ராமர் கோவிலை இடிப்பார்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளது புயலைக் கிளப்பியுள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்து வரும் சூழலில், அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். 
இந்நிலையில் உத்தர பிரதேச மாநில பாரபங்கி பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, காங்கிர்ஸ், சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்கு ஆபத்து என பேசியுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

அப்போது பேசிய அவர், காங்கிர்ஸ், சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்கு ஆபத்து; அவர்கள் புல்டோசரை வைத்து ராமர் கோவிலை இடித்து விடுவார்கள். 

அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு முன், ராமர் எப்படி கூடாரத்தில் இருந்தாரோ அதே நிலை மீண்டும் நேரிடும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், புல்டோசரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என யோகி ஆதித்யநாத்திடம் இருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என பேசியுள்ளார். பிரதமரின் இந்த கருத்து தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

ஏற்கனவே மத ரீதியான கருத்துகளை பிரச்சாரத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில்  காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் புல்டோசரை வைத்து ராமர் கோவிலை இடிப்பார்கள் என கூறுவது மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர்,

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola