PM Modi Chandrachud Controversy |தலைமை நீதிபதி இல்லத்தில் மோடி!கொதிக்கும் நெட்டிசன்ஸ்

Continues below advertisement

டெல்லியில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது தற்போது விமர்சன வலையில் சிக்கியுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டின் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த புகைப்படத்தை, பிரதமர் மோடி பகிர்ந்திருந்தார். அதில் தலைமை நீதிபதி மற்றும் அவரது மனைவி கல்பனா தாஸுடன் இணைந்து பிரார்த்தனை பிரதமர் மோடி பிரார்த்தனை செய்திருந்தார்.

இந்த புகைப்படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி தனது X இல் தெரிவித்ததாவது, சந்திரசூட் ஜி இல்லத்தில் விநாயகர் பூஜையில் கலந்து கொண்டேன். பகவான் ஸ்ரீ கணேஷ் நம் அனைவருக்கும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அற்புதமான ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கட்டும்"  என குறிப்பிட்டிருந்தார்.  

இந்த நிகழ்வு தற்போது விமர்சன வலையில் சிக்கியுள்ளது. பிரதமர் மோடி, தலைமை நீதிபதி வீட்டிற்கு சென்றுள்ளது, எதிர்மறையான போக்கை ஏற்படுத்தும் என்றும், தலைமை நீதிபதி தீர்ப்பானது பிரதமர் மோடிக்கு சாதகமாக இருக்கும் எனவும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுசாரார் இதில் தவறு ஒன்றும் இல்லை என ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் இதுகுறித்து உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிபல் தெரிவிக்கையில் "நான் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இருக்கிறேன். பல நீதிபதிகளைப் பார்த்திருக்கிறேன், CJI மிகவும் நேர்மையான நபர் என்று எந்த சந்தேகமும் இல்லாமல் என்னால் சொல்ல முடியும், ஆனால், இந்த நிகழ்வுகளை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது
மகாராஷ்டிரா தேர்தல் சூழலில் பிரதமர் இதுபோன்ற ஒரு தனிப்பட்ட நிகழ்வை காட்சிப்படுத்துவது சரியல்ல" என்று சிபல் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் மக்களின் மனதில் பதிந்திருக்கும். "ஏனென்றால், அதைச் சுற்றி வதந்திகள் எழும். அந்த சூழ்நிலைக்கு நீங்கள் இடம் கொடுக்கக்கூடாது என கபில் சிபல் தெரிவித்தார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram