Pawan Kalyan on Udhayanidhi : சனாதனத்தை சீண்டாத! கூட்டத்தோட அழிஞ்சிடுவ.. சாபம் விட்ட பவன் கல்யாண்
உதயநிதி ஸ்டாலினின் பேச்சை சுட்டிக்காட்டி சனாதன தர்மத்தை அழிப்பேன் என்று கூறுபவர்கள் அழிந்து போவார்கள் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியுள்ளது விவாதமாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் சனாதனம். அதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் வேலை” என விமர்சித்தார். இந்தப் பேச்சு பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கருத்து தேசிய அளவிலும் விவாதமாக மாறியது. அதன்பிறகும் தான் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை என்றும், சனாதனத்தை ஒழித்தே ஆக வேண்டும் என்று சொல்லி அதிரடி காட்டினார் உதயநிதி ஸ்டாலின்.
இந்தநிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சை சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார். திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இந்த விவகாரம் பற்றி தமிழில் பேசினார். சனாதன தர்மத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.