lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

Continues below advertisement

மக்களவையின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க நாளைய தினம் தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், INDIA கூட்டணிக்கு துணை  சபாநாயகர் பதவியை கேட்டு செக் வைத்து வந்தது காங்கிரஸ்.. ஆனால் அதற்கு ராஜ்நாத் சிங்கிடமிருந்து கிரின் சிக்னல் வராததால், முதல் முறையாக மக்களவை தலைவரை தெர்ந்தெடுக்க நாளைய தினம் நாடாளுமன்றத்தில் தேர்தல் நடைப்பெற இருப்பது பரபரப்பை கூட்டியுள்ளது.

18 வது மக்களவை தற்போது கூடியுள்ள நிலையில், இதுவரை நடந்துள்ள 17 மக்களவைகளில் ஒரு முறை கூட மக்களவை தலைவருக்கான தேர்தல் நடைப்பெற்றது இல்லை. ஒருமித்த கருத்துடனேயே மக்களவை சபாநாயகர் இதுவரை தேர்ந்தெடுக்க்பட்டுள்ளர். இந்நிலையில் தான் ஆளும்கட்சி, எதிர்கட்சி ஆகிய இரண்டும் ஒருமித்த கருத்துடன் புதிய மக்களவை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கையை NDA கூட்டணி மேற்கொண்டு வருகிறது.

இதற்காக கூட்டணி மற்றும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வழியாக நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடுவை சரிகட்டிய ராஜ்நாத் சிங்  I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி வந்தார்.

குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிக்கார்ஜுன கார்கே உட்பட பல INDIA கூட்டணி கட்சி தலைவர்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார் ராஜ்நாத் சிங். அதில் கார்கேவை தொடர்பு கொண்ட ராஜ்நாத் சிங் “ஓம் பிர்லாவை NDA கூட்டணி மக்களவை தலைவராக தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு INDIA கூட்டணி ஆதரவளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் INDIA கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தபட மாட்டார்கள், NDA வேட்பாளருக்கு INDIA ஆதரவளிக்கும், ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்கட்சிக்கு ஒதுக்குவது தான் காலம் காலமாக மக்களவையின் மரபு, அதன் படிNDA கூட்டணி INDIA கூட்டணிக்கு மக்களவை துணை சபாநாயகர் பதவியை வழங்கி ஆதரவளிக்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே கேட்டிருந்தார்.

இந்நிலையில் கலந்தாலோசித்து விட்டு பதில் சொல்வதாக சொல்லி போனை வைத்த ராஜ்நாத் சிங், தற்போது வரை துணை சபாநாயகர் பதவியை ஒதுக்குவது குறித்து எந்த முடிவையும் INDIA கூட்டணியிடம் தெரிவிக்கவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாகவே மக்களவை தலைவர் தேர்தலில் INDIA கூட்டணி போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக கடந்த மக்களவையில் சபாநாயகராக பொறுப்பு வகித்த ஓம் பிர்லாவே போட்டியிடுகிறார். 115 எதிர்கட்சி எம்.பி-களை கடந்த லோக்சபாவின் போது இவர் சஸ்பெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது. இவரை எதிர்த்து "இந்தியா" கூட்டணியின் வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்

இந்நிலையில் நாடாளுமன்ற வரலாற்றில், முதல் முறையாக மக்களவை தலைவருக்கான தேர்தல் நடைப்பெற உள்ளது அரசியல் வட்டாரத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.

ஆனால் நாடாளுமன்றத்தில் பாதிக்கு மேல் MP-க்கள் NDA கூட்டணியில் இருப்பதால், மீண்டும் ஓம் பிர்லாவே மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram