ABP News

Pa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMK

Continues below advertisement

சாதிய ரீதியான பிரச்சனைகள் நடைபெறுவதையாவது ஒப்புக்கொள்வீரா? என முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கேள்வி எழுப்பி.. சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நான் தயார் என பா. ரஞ்சித் தெரிவித்துள்ளது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே  சாராய வியாபாரத்தை தட்டி கேட்ட கூறப்படும் இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் மற்றும் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞர் ஆகிய இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா??? மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களே!! 

தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி!” என குறிப்பிட்டுள்ளார்.

 உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து, முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதனை டேக் செய்து இயக்குனர் பா. ரஞ்சித் தற்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola